• Latest News

    August 10, 2014

    இலங்கையில் எபோலா வைரஸ் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

    உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கையில் நுழைவதை மற்றும் பரவுவதை தடுக்க விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் விமான நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
    .
    உலகம் முழுதும் பரவிவரும் இந்த உயிர்கொல்லி வைரஸ் நாட்டினுள் நுழைவதை தடுப்பது மிக முக்கியமான விடயம். இதற்கமையவே விமான நிலையங்களில் இப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
    இந்த வைரஸ் தாக்கத்தினால் கடந்த திங்கள் வரையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 887 உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், நீர் கொழும்பு ஆதார வைத்திய சாலையின் வசதிகளை அதிகரித்து நோய்த் தொற்றுடன் நாடு திரும்பும் நபர்களுக்கு உடனடி சிகிச்கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் இடம் பெற்ற அவசர கூட்டத்தில் சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் எபோலா வைரஸ் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை – சுகாதார அமைச்சு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top