கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என சில அமைப்புகளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருதானை- மாளிகாவத்தை பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தவ்ஹித் ஜமாத் அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்திருந்த போதிலும் அந்த அமைப்பு இன்று எந்த பேரணியையும் நடத்தவில்லை.
கொழும்பு கோட்டைஇ புறக்கோட்டை பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை இந்த அமைப்புகள் நடத்த உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து புறக்கோட்டை பொலிஸார் அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிமன்றம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்த தடைவிதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்திருந்தார்.

0 comments:
Post a Comment