ஜுனைட் நளீமி: கடந்த
26 நாட்களாக இடம்பெற்று வந்த இஸ்ரேலின் சட்டவிரோத காசா ஆக்கிரமிப்பின்
தோழ்வியின் அறிகுறியாக இஸ்ரேல் ஒருதலை பட்சமாக தமது ஆக்கிரமிப்பு
படையினரின் ஒரு பகுதியினரை காசாவின் சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக
அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிகிழமை (2014.08.01) இஸ்ரேலிய பாதுகாப்பு
உயர்மட்டக் குழுவின் ஐந்து மணிநேர மந்திர ஆலோசனைகளின் பின்னர் இம்முடிவு
சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. வழிந்த இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரில் களமிறங்கிய இஸ்ரேலைப் பொருத்தவரை
எதிர்பாராத இழப்புக்களும்இ சர்வதேச எதிர்ப்பலைகளும் உள்நாட்டில் எழுந்துள்ள
மக்கள் எதிர்ப்புணர்வுகளும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலிய அரசை
நிர்ப்பந்தித்துள்ளது. இந்நிலையில் யுத்த முடிவுகள் 2000 மே 22ம் திகதி
லெபனானை விட்டு இஸ்ரேல் கண்ணீருடன் வெளியேறியதை ஜாபகப்படுத்துகின்றது.
இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான படை விலகள்.
இஸ்ரேல் ஒருதலைப் பட்சமாக தனது படை வலகளை
அறிவித்தமை பல்வேறு செய்திகளை சொல்லிச் செல்கின்றது. குறிப்பாக பலமான
அணிகளுடன் பேசுவதனூடாக அதிக விட்டுக்கொடுப்புக்களை தாம் எதிர்கொள்ள
வேண்டும் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு எப்போதும் காணப்படுகின்றது. அத்தோடு
சர்வதேசத்திற்கு முன்னாள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் எப்போதும் இஸ்ரேலினால்
நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற நிலையில் இம்முறையும்
சர்வதேசத்திடம் மாட்டிக்கொள்ள இஸ்ரேல்
விரும்பவில்லை. லெபனான் மீதான படை விலகல், பாலஸ்தின் மேற்கு கரை காசா மீதான
ஏரியல் ஷரோனின் படைவிலகல் செயற்திட்டம் என்பன ஒருதலைப் பட்சமானதாகவே
அமைந்திருந்தது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் மீண்டும் தன்னை
பலப்படுத்திக்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடவும்ää காசா மீதான
முற்றுகையை தொடர்ந்தும் மேற்கொள்ளவும் வாய்ப்பாக ஒருதலைப் பட்சமான
இவ்வறிப்பு அமைகின்றது.
காசா போரின் பங்காளிகள்.
நடந்து கொண்டிருக்கும் மிலேச்சத்தனமான
இஸ்ரேலின் காசா மீதான தினித்துவிடப்பட்ட இனவொழிப்பு யுத்தத்தில்
அமெரிக்காää பிரித்தானியாää உள்ளிட்ட சில அரபு தேசங்களும் கூட்டணி அமைத்து
காசா மீது போர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஹமாஸ் ஆரம்பத்தில் சூட்சகமாக கருத்து தெரிவித்திருந்த போதும்
தற்போது அவ்வுண்மை ஊடகங்கள் வாயிலாக வெளிவரத்தொடங்கியுள்ளன. அமெரிக்கா
2000 மேரியன்ஸ்,பிரிடிஷ் 700 சிறப்பு உளவுப்படையினர், எகிப்து, சவூதி
அரேபியா, அமீரகம் என தமது பங்கிட்கு படைகளை இவ்யுத்தத்தில்
நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுத்தியுள்ளதாக ஊடகவியலாளர் முஹம்மத்
நாசர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலில் கலஞ்சியப்படுத்தியுல்ல
ஆயுத தளபாடங்கள் முழுக்க காசா மீது பாவிக்கப்பட்டிருந்தது.
இதற்கும் மேலதிகமாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு திட்டத்திற்கு (அயன் டோம்
சிஸ்டம்) அமெரிக்க செனட்சபை 225 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை
அங்க்கீகரித்திருந்தது. ஆயுத வர்த்தகத்திற்கெதிரான அமைப்பு (CAAT)
வெளியிட்ட அறிக்கையின் படி 2010 மேற்கொள்ளப்பட்ட ஆயுத ஏற்றுமதி
ஒப்பந்தங்களின் கீழ் பிரிடிஷ் 70மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான
பல்வேறு இராணுவ உபகரணங்களையும் ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளதுடன்
அவை காசா மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக
குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்
நோக்கங்கள் சட்டவிரோத இஸ்ரேலின் எல்லை விஸ்தீரணம். முற்று முழுவதுமாக
பாலஸ்தின மண்ணை ஆக்கிரமிப்பு செய்வதற்கான அனைத்து வகை செயல்திட்டங்களையும்
இஸ்ரேல் அவ்வப்போது செய்து வந்திருக்கின்றது. குறிப்பாக எரியல் செரோன்
காலத்தில் முன்வைக்கப்பட்ட Disengagement plan ( Seperation plan
)வெளிப்படையாக பாலஸ்தீன இராஜியத்தை உருவாக்குவதற்கான அடிப்படை என்று
கூறப்பட்ட போதும் உண்மையில் இஸ்ரேலை பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் இருந்து
காப்பதும் மேற்கு கரை மற்றும் காச நிலப்பரப்புக்களை திறந்த வெளி
சிறைக்கூடமாக மாற்றுவதுமே இலக்காக கொண்டிருந்தது. (இத்திட்டத்தின் கீழ்
மேற்குக்கரை காசா நிலப்பரப்புக்களில் காணப்பட்ட விவசாய உற்பத்தி மையங்கள்
அழித்தொழிக்கப்பட்டதும் மின்சாரம்தொழிற்துறை மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல
அடிப்படை அம்சங்களுக்கு இஸ்ரேலை தங்கி வாழ வேண்டிய நிலை பலஸ்தீனர்களுக்கு
ஏற்பட்டது).
இம்முறை மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு
போரின் போது இஸ்ரேல் தனது எல்லைக்கோட்டிலிருந்து பலமீற்றர்கள் முன்னால்
தமது நிலைகளை எல்லை இட்டுள்ளனர். அத்தோடு Disengagement plan திட்டத்தில்
மேற்குக்கரை காசா நிலப்பரப்புக்களில் அனைத்து கட்டடங்களையும் மையங்களையும்
அழித்தொழித்தது போன்று இன்று காசாவை கற்கால (Stone age)
நிலப்பிரதேசமாக மாற்றியமைத்துள்ளனர். உண்மையில் டிஸ் என்கேட்ஜ்மென்ட்
திட்டம் இஸ்ரேலினால் ஒருதலைப்பட்சமாக முன்வைக்கப்பட்ட திட்ட
முன்மொழிவாகும். இதன் நி;பந்தனைகளின் அடிப்படையில் இஸ்ரேல் தனது
இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது அதனை பாலஸ்தின தரப்பு
தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது இஸ்ரேல் தனது பாதுகாப்பை எவ்வகையிலும்
தக்கவைத்துக்கொள்ளும் என குறிப்பிடப்படுள்ளது. என்ற போதும் பலஸ்தீனின்
ஹமாஸ் இத்திட்டத்தை எதிர்த்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே வேலை ஹமாஸ் இருக்கும் வரை இஸ்ரேல் தனது
ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாது என்ற
இஸ்ரேலின் மனப்பதிவு காசா மீது போர் தொடுக்க காரணமாகின.
ஹமாசினை அழித்தொழித்தல்
ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிரியாகவே தொடர்ந்தும்
கணிக்கப்பட்டு வந்துள்ளது. ஹமாசின் பிராந்திய இஸ்லாமிய அமைப்புக்களுடனான
உறவுகள்ää குறிப்பாக சகோதரத்துவ அமைப்புடனான உறவுகள் இஸ்ரேலின் இருப்புக்கு
பிராந்திய நாடுகளின் ஆதரவினை பெறுவதில் சவாலாக அமைந்திருந்தது. ஈரானின்
இஸ்ரேல் எதிர்ப்பு மனோநிலையினை ஹமாஸ் தமக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொண்டது. இராக்கில் அமெரிக்க படை வெளியேற்றத்தின் பின்னர்
ஷீயா சார்பு அரசு இஸ்ரேலுக்கு இன்னும் அச்சத்தை ஏற்;படுத்தி இருந்தது.
மறுபுறம் சிரியா, லெபனான் என சுற்றியுள்ள பிராந்திய நாடுகள் இஸ்ரேல்
எதிர்ப்பாளர்களாக காணப்படுவது இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது.
இத்தகைய நிலையில்தான் பிராந்திய நாடுகளுக்குள் உள்நாட்டு மோதல்களை
உருவாக்கிவிட்டு தமது அகன்ற இஸ்ரேல் இராஜ்ய கனவினை நிறைவேற்றிக்கொள்ள
மேற்குடன் இணைந்து இஸ்ரேல் மிக நிதானமாக செயற்பட்டு வந்துள்ளது. கடந்த கால
அரபு இஸ்ரேல் யுத்தம்ää இறுதியாக நடந்த காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு
நடவடிக்கைகளின் போது அரேபிய நாடுகளின் உதவியும் எகிப்தின் உதவியும் இஸ்ரேலை
அடிபணியச்செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நிலை முற்றிலும்
மாறுபட்டு காணப்படுவது இஸ்ரேல் காசா மீது போர்தொடுக்க இலகுவாக அமைந்தது.
புதிய தொழிநுட்பம் மற்றும் நவீன ஆயுத
பரிசோதனைகளை மேற்கொள்ளல். இஸ்ரேல் இம்முறை மேற்கொண்ட காசா மீதான யுத்தம்
தனது நவீன போரியல் தொழினுட்பத்தை பரீட்சிக்க சந்தர்ப்பமாக அமைந்ததது
என்பதனை இஸ்ரேலின் பாதுகாப்புத்தரப்பின் குறிப்புக்களில் இருந்து
அறியக்கிடைக்கின்றது. கடந்த வருடம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் மோசே
யாலோன் “இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எதிர்வரும் காலங்களில் ஆகாயää கடல்ää
தரைமார்க்க யுத்த தளபாடங்களும் ஆளில்லா கலங்களும் கொண்ட தொழிநுட்ப
மேலாதிக்கத்தினை நிலை நிறுத்தும் சக்தியாக இருக்கும்” என
குறிப்பிட்டுள்ளார்.
இதனடியாக இன்றைய காசா ஆக்கிரமிப்பு
யுத்தத்தில் “ஸ்டார்” என அழைக்கப்படும் ஹெர்மஸ் (Hermers) 900UAV ரக
ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றது. அதே போன்று 120 மில்லிமீற்றர்
கொங்க்ரிட்களை தகர்த்து உள்ளே வெடிக்க கூடிய செல்வீச்சுக்கொண்ட யுத்த
டாங்கிகள் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலிலும்ää
தரையிலும்ää ஆகாயத்திலிருந்தும் ஒரே நேரத்தில் ஒரே இலக்கை தாக்கியழிக்க
கூடிய தொடர்பாடல் முறையும் இம்முறை அனைத்து யுத்த கலங்களுக்கும்
துருப்புக்களுக்கும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் எதிரிகள்
தாக்குதல் மேற்கொள்ள எத்தனிக்கும் போது இலக்குகளை துல்லியமாக இனம்கண்டு ஒரே
நேரத்தில் முப்படையினரும் தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை இஸ்ரேலிய
படைகளுக்கு கிடைத்துள்ளது. அத்தோடு ஐ. நா விதிமுறைகளுக்கு எதிரான
ஆயுதங்களையும் காசா நிலம் மீது இஸ்ரேல் தாராளமாக பரீட்சித்துள்ளது.
மேற்கின் எதிர்பார்ப்புக்கள்
குறிப்பாக அமெரிக்காää பிரித்தானியா போன்ற
நாடுகளின் ஆயுத விற்பனைக்கான விளம்பரமாக காசா மீதான ஆக்கிரமிப்பு போர்
பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக டோம் அயன் (Dom iron system) ஆகாய
பாதுகாப்பு செயல்முறைத் திட்டம் பற்றி இன்று பரவலாக கவன ஈர்ப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹமாஸ் வீசிய ஆயிரக்கணக்கான
ஏவுகணைகளிலிருந்து இஸ்ரேல் தமது இழப்புக்களை ஓரளவு தவிர்ந்து கொண்டதாக
குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு மேலும் இஸ்ரேலின் இத்திட்டத்திற்கு
அமெரிக்கா 225 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானம்
எட்டியிருப்பதும் நோக்கத்தக்கது. இத்தகைய பாதுகாப்பு நடைமுறையினை எண்ணெய்
வள அரபு நாடுகளும் போட்டியிட்டுக்கொண்டு நிர்மாணிக்க முயலும் என்ற
கணிப்பீடும் அமெரிக்காவைப் பொருத்தவரை மறைமுக இலக்குகளாகும். அதே போன்று
மர்கவா (Markava) யுத்த தாங்கி பற்றிய மிகைப்படுத்தல்களும் ஆயுத விற்பனையை
பிராந்தியத்தில் தாரளமாக மேற்கொள்ள வழிவகுக்கும். மற்றொரு பகுதியில் ரஷ்ய
வீழ்ச்சிக்கு முன்னர் பிராந்தியத்தின் இயக்கு சக்தியாக ரஷ்யாவே
காணப்பட்டது. இத்தகைய நிலையினை மாற்றி அமெரிக்க கூட்டணியின் தளங்களை
பிராந்தியத்தில் நிலை நிறுத்தி எண்ணெய் கபளீகர நடவடிக்கைக்கு உகந்த சூழலை
உருவாக்க இஸ்ரேல் என்றும் தத்துப்பிள்ளை தளமாக அமைய வேண்டிய தேவையும்
அமெரிக்க கூட்டனிக்கு தேவைப்பாடாக அமைகின்றது.
தோற்றது இஸ்ரேல்.
ஒரு தலைப்பட்சமான படைவிலக்கல்
தீர்மானத்தினூடாக இஸ்ரேல் இம்முறையும் தனது தோழ்வியினை ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தைப் பொருத்தவரை தமது ஹமாஸ் மீதான கணிப்பீடு பிழையானது
என்பதனை ஆபரேஷன் புரடேக்டிவ் எட்ஜ் மூலம் நிருபித்துள்ளது. யுத்தம்
ஆரம்பிப்பதற்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள்ளால் முழு காசா
நிலப்பரப்பினையும் தமது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வர முடியும் என்ற அதீத
நம்பிக்கையிலேயே இஸ்ரேலிய இராணுவம் களமிறங்கியது. முழு இராணுவ
முன்னெடுப்புக்களும் தரை மேல்பகுதியினை கவனத்திற்கொண்டே திட்டமிடப்பட்டது.
ஆனால் இம்முறை யுத்தம் நிலத்தின் கீழ் தளத்திற்கு ஹமாசினால் கொண்டு
செல்லப்பட்டது எதிர்பார்க்க முடியாத ஒன்றாக மாறியது. புவியியல் ரீதியில்
குறுகிய நிலப்பரப்புக்குள் முழுக்க முழுக்க நிலக்கீழ் யுத்தமாக பரிணாமம்
பெற்றது இதுவே முதல் தடவையென இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேல் இராணுவத்தரப்பில் 113
அதிகாரிகள் உட்பட 497 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு
கூலிப்படையினர் 270 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 166 சிப்பாய்கள்
போர்க்களத்திற்கு செல்ல பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக
குறிப்பிடப்படுகின்றது.
அதே போன்று இஸ்ரேலின்
கட்டுப்பாட்டுப்பகுதியில் அரபுக்களும்ää யூதர்களும் அரசுக்கெதிராக
போராட்டங்களில் இறங்கியமையும் நெடன்யாஹ{வின்; அரசுக்கு கிடைத்த அரசியல்
பின்னடைவேயாகும்.
குறிப்பாக “Disengagement plan”
திட்டத்தின் பின்னர் அரபுக்கள் மத்தியில் மீண்டும் ஒரு இந்திபாழா
ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய செய்திகள் இஸ்ரேல்
கட்டுப்பாட்டு ஜெரூசலம் உள்ளிட்ட பகுதிகளில் புரட்சியை தூண்டுவதாக
அமைந்திருந்ததை இஸ்ரேலிய அரசு கவனமாக உற்று நோக்கியது. எனவேதான்
அத்தகைய ஆர்ப்பாட்டங்களை அடக்க
துருப்புக்களை பயன்படுத்தியமையும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதையும் அவதானிக்க
முடிந்தது. இந்நிலையில்தான் மேலதிக 16000 துணைப்படைக்கான ஆட்சேர்ப்பு
அழைப்பினை இஸ்ரேலிய இராணுவம் விடுத்தது.
சர்வதேச மட்டத்தில் பல நாடுகள் இஸ்ரேலை
பல்வேறு வழிகளில் கண்டனத்துக்குற்படுத்தின. சில நாடுகள் தமது தூதுவர்களை
திருபியளைத்ததுடன் சில நாடுகள் இஸ்ரேல் இறக்குமதிகளை தடை செய்தன. பல
வெளிநாட்டு அரச அதிபர்கள் இஸ்ரேலை பயங்கர வாத நாடு என தெரிவித்தனர்.
உள்ள10ர் சர்வதேச உடகங்களில் காசா மீதான கொலைவெறி குறித்த செய்திகள்
வெளிவந்தமை இஸ்ரேளுக்கெதிரான உலகலாவிய கருத்தை உருவாக்கியது. பல்வேறு
தணிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ள முனைந்த போதும் அவை தோழ்வியிலேயே முடிந்தது.
எனவேதான் ஊடக யுத்தம் ஒன்றின் மூலம் உலகத்தின் அனுதாபத்தினை தம் பக்கம்
திசை திருப்ப முனைந்தது. இந்த வகையில் யுத்தத்திற்கு காரணமாக அமைந்த
இரு இஸ்ரேல் இளைஜர்கள் கடத்தல் விவகாரம் ஹமாஸ் மீது பலிசுமத்துவதற்கான ஒரு
நாடகமாகவே கருதப்படுகின்றது. அத்துடன் 72 மணி நேர யுத்த நிறுத்த உடன்பாடு
இஸ்ரேல் மீருவதற்கான காரணங்களில் ஒன்றாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கு
நெருங்கிய உறவினரான இராணுவ வீரர் கடத்தப்பட்டமை இஸ்ரேலினால்
குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.
இஸ்ரேலினால் முன்வைக்கப்பட்ட ஹமாஸ் மீதான
அனைத்து போலிக்குற்றச்சாட்டுக்கலும் தொடர்ந்து வந்த தகவல்களின்
அடிப்படையில் பொய்யானது என நிரூபிக்கப்பட்டது.
Hadar Goldin என்ற இஸ்ரேலிய சிப்பாய்
கடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னுக்குப்பின்
முரணான முரணான தகவலை இஸ்ரேல் முன்வைத்தது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட
இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு ஊடகவியலாளர் Ronen Bergman உண்மையில் Hadar
Goldin சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாலும் இஸ்ரேலிய இராணுவ உபாயமான “Hannibal
Directive” முறை மூலம் இஸ்ரேலிய இராணுவத்தினாலேயே கொல்லப்பட்டதாக நிரூபணம்
செய்துள்ளார். ஏனெனில் கடந்த காலங்களில் சிறைப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய
இராணுவ வீரர்களை விடுதலை செய்வதற்கு பாரிய விலையினை இஸ்ரேல் செலுத்த வேண்டி
ஏற்பட்டது. காலித் மிஷல் மீதான தாக்குதல் முயற்சியில் சிறைப்பிடிக்கப்
பட்ட இஸ்ரேலிய உளவுப்பிரிவினரை விடுவிக்க ஷெய்ஹ் அஹமட் யாசின் உள்ளிட்ட
பலரை விடுதலை செய்ய வேண்டி ஏற்பட்டமைää கிலட் சாலிட் என்ற இஸ்ரேலிய
சிப்பாய்க்கு 1027 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டி ஏற்பட்டமையும்
கடந்த கால அனுபவங்களாகும்.
எனவேதான் “கடத்தப்பட்ட சிப்பாயை விட இறந்த
சிப்பாய் சிறப்பானது” என்ற வாசகம் இஸ்ரேலிய இராணுவ கட்டமைப்பில்
முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நியதியின் அடிப்படையிலேதான் Hadar Goldin;
இஸ்ரேலிய இரானுவத்தினாலேயே கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய
செயற்பாடுகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டமையும் இஸ்ரேல் மீதான
நம்பிக்கை ஈனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இவ்வாறிருக்க இஸ்ரேலுக்கு
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அனைத்து நிலக்கீழ் சுரங்கப்பாதைகளும்
அழித்தொழிக்கப் பட்டதனால் படை வாபஸ் இடம்பெறுவதாக இஸ்ரேலியப் பிரதமர்
நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார் . என்ற போதும் தொடரும் ஹமாசின்
ஏவுகணை தாக்குதல்கள் இஸ்ரேல் இராணுவம் காசாவின் மரணப்பொறிக்குள் இருந்து
தப்பியோடியதாட்கான செய்தியினைமுன்வைத்துள்ளது. அத்தோடு இஸ்ரேலில் வந்து
குடியேறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் தமது இஸ்ரேல் பிரஜா உரிமையை
இரத்துச்செய்து விட்டு தமது சொந்த நாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதும்
இஸ்ரேல் இனி உலக வரைபடத்திலிருந்து மெல்ல மெல்ல அகற்றப்படும் என்ற செய்தியை
கட்டியம் கூறுவதாக அமைகின்றது.
0 comments:
Post a Comment