நிந்தவூர் ஹம்ஸா ஹோட்டல் உரிமையாளர் சீ.எம்.ஹம்ஸா இன்று காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று பி.ப 05.30 மணியளவில் நிந்தவூர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டார்கள்.
ஹோட்டல் துறையில் சுடார் 35 வருட அனுபவங்களைக் கொண்ட இவர் மக்களுடன் மிகவும் அன்பாக சிரித்த முகத்துடன் பழகக் கூடியவராக இருந்தார்.
இவரின் தயாரிப்பில் உருவாகும் பெஸ்டிஸ், இறைச்சி ரொட்டி, பராட்டா போன்றவற்றிக்கு பெரும் கிராக்கி இருந்தது. அவற்றின் சுவை தனியானதாகும். இவரின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பெஸ்டிஸ் இங்கிருந்து இலண்டன் வரைக்கும் (கொண்டு செல்லும் வகையில் பதணிடப்பட்டு) எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவரின் மரணம் நிந்தவூருக்கு பெரும் இழப்பாகும். அன்னார் ஜென்னத்துல் பிர்தௌஸ் செல்ல பிராத்திப்போம்

0 comments:
Post a Comment