• Latest News

    September 16, 2014

    சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

    chinaசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பல்வேறு  திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார்.

    மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் கோலாகல வரவேற்பளிக்கப்படவுள்ளன.
    இதேவேளை, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுதல், கலாசார நிலையம் ஒன்றிற்காக நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்தல், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற் றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தல் ஆகிய அம்சங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே முன்னடுக்கப்பட விருப்பதாகவும் தெரியவருகிறது.

    இரண்டாம் நாளான நாளை காலை சீன ஜனாதிபதி கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதமர் தி.மு.ஜயரட்ண மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரையும் சீன ஜனாதிபதி தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top