ஊவா மாகாண சபைத் தேர்தல் களத்தில் முஸ்லிம்களின் நிலை தொடர்பாக தொடர்பாக அவர் கருத்து வெளியிடும்போது மேலும் குறிப்பிட்டதாவது,
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற அட்டூழியங்கள் அடாவடித்தனங்கள் தொடர்பில் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் ,ன்று ஊவா தேர்தலை எதிர் கொண்டு வெற்றி கொள்ள துடிக்கும் ,ந்த வங்கரோத்து அரசியல்வாதிகளை எளிதில் மக்கள் ,னங்கண்டு கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தான்தோன்றித் தலைவர்கள் சிலர் தமது கட்சியின் சின்னத்தை மறந்து வேறொரு சின்னத்தில் கூட்டிணைந்து போட்டியிடுவது யாரைத் திருப்திப்படுத்துவதற்காக ? ,வர்களின் நோக்கம் என்ன ? ,ந்த கூட்டு ஒற்றுமை எதிர்வருகின்ற தேர்தலிலும் நீடிக்குமா ?
முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டபொழுது, பள்ளிவாயில்கள் தீக்கிரையாக்கப்பட்ட பொழுது, வியாபார ஸ்தலங்கள் கொழுத்தப்பட்டபொழுது, உடமைகள் சூரையாடப்பட்டபொழுது முஸ்லிம்களுடைய உயிர்கள் காவு கொள்ளப்பட்டபொழுது ஏன் ,ந்த தலைவர்கள் ஒன்று சேரவில்லை. ,ப்போது தேர்தல் நாடகத்தை அரங்கேற்றவே ,வர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது. வெறும் ஆசனங்களுக்காக ஒன்று சேருகின்ற ,வர்களை பதுளை மாவட்ட முஸ்லிம்கள் நன்கறிவார்கள். ,வர்களது நாடக அரங்கேற்றத்தை முழு நாட்டு முஸ்லிம்களும் நன்கு அறிவார்கள்.
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ அவர்கள் தனது பதவியைத் துறந்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. ஏனெனில் பதுளை மாவட்ட முஸ்லிம்கள் அவருக்கு அமோக ஆதரவினை வழங்கி வருகின்றார்கள். அராஜகம் ஒருபோதும் நிலைக்கப்போவதில்லை என்பதை சம்மந்தப்பட்டோர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தில் ,ணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகள் தம்மை அரசுக்கு விரோதமாகக் காட்டிக்கொண்டு முஸ்லிம் மக்களிடம் நாடகமாடுவதை அடிக்கடி காண்கிறோம். அதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலை வைத்து அரசுக்கு எதிரானவர்கள் போல் காட்டி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று அரசுக்கு தாரை வார்த்ததை நாடு அறியும்.
,து ஒரு ஏமாற்று வேலை என்பதை அன்றே நாம் மக்களுக்கு தெளிவு படுத்தினோம். ஆனால் எமது வார்த்தைகளில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள முயற்சிக்காத கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து ஏமாந்து நின்றதை கண்டோம்.
அதன் பின் கடந்த மேல் மாகாண சபை தேர்தலின் போது அமைச்சர்களான ஹக்கீம் ரிசாத் ஆகியோரின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளை பெற்ற பின் மாகாண சபையில் அரசுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்பதால் அவ்வாறே செய்வர் என்ற யதார்த்தத்தைக்கூட புரியாதவர்களாக முஸ்லிம்கள் ,ருக்கமாட்டார்கள்.
ஆகவே முஸ்லிம் அமைச்சர்களின் போலியான தேர்தல் ஒற்றுமைக்கு பதுளை முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். ,ன்றைய சூழ் நிலையில் அரசுக்கு எதிரான ஏதாவதொரு கட்சிக்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பதன் மூலம் பதுளை முஸ்லிம்கள் தமது குரலை மாகாண சபையில் ஒலிக்கச்செய்ய முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment