பி.எம்.எம்.ஏ.காதர்; பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் ஆசிரியையாக் கடமையாற்றி 22 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஒய்வு பெற்ற திருமதி எஸ்.எல்.பௌசுல் ஐன் ஆசிரியைக்கான பிரியாவிடை வைபவம் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. தில் அதிபர் எம்.ஏ.எம். இனாமுல்லா ஓய்வு நிலை அதிபர் எம்.எச்.குமாயுன் பிரதி அதிபர் ஏ.கே.சமீம். ஆசிரியை திருமதி ஹிபத்துன்னிஷா அன்சார் ஆகியோருடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆசிரியை திருமதி எஸ்.எல்.பௌசுல் ஐன் அவர்களுக்கு பாடசாலை சார்பாக நினைவுச் சின்னம் நினைவுப் பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.
September 05, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment