• Latest News

    September 29, 2014

    பௌத்தத்துக்கு அச்சுறுத்தலாம்!: தீர்வு கிடைக்காவிட்டால் நாட்டுக்கு புதிய தலைவரை ஏற்படுத்துவோம்: BBS

    bi 1சஹீத் அஹமட்:  இலங்கை ஒரு சிங்கள ,பெளத்த நாடு ,  இலங்கையில் பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யமுடியாவிட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிக்க போவதில்லை, இந்த நாட்டை வழிநடாத்த கிராமத்தில் இருந்து ஒரு நபரை கொண்டுவருவோம் என பொது பல சேனா அமைப்பின் தலைவர் விமலா ஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
     மேலும் அங்கு உரையாற்றியுள்ள அவர் , இது ஒரு சிங்கள பெளத்த நாடு, இலங்கை ஒரு பலமத நாடு அல்ல.  இலங்கையில்  பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளோம்  பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்தினால் நிவர்த்தி
    செய்யமுடியாவிட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிக்க போவதில்லை. இங்கு பௌத்தம் சில தீவிரவாத முஸ்லிம் , கிறித்தவ அமைப்புக்களினால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது  என அவர் தெரிவித்துள்ளார்.

    கடும்போக்கு   அமைப்பான பொது பல சேனா ஏற்பாடு செய்துள்ள பெளத்த மாநாடு  கொழும்பில் இடம்பெறுகிறது. அங்கு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

    இந்த மாநாட்டுக்கு அதீதியாக அழைக்கப்பட்ட மியன்­மாரின் தீவிரவாத இயக்கமான ‘969’ இயக்­கத்தின் தலை­வ­ரான  அசின் விராது தேரர் கலந்து உரையாற்றியுள்ளார் , அவர் உரையாடும்போது மியன்­மாரின் ‘969’ இயக்­கம் பொது பல சேனாவுடன் இணைந்து உலக முழுவதிலும்  பௌத்தத்தை பாதுகாக்கும் என தெரிவித்துள்ளதுடன், தனக்கு விசா வழங்க வேண்டாம் என கோரப்பட்ட போதும் இங்கை வருவதற்கு தனக்கு விசா வழங்கியமைக்கு  ஜனாதிபதிக்கு நன்றி  கூறுவதாக தெரிவித்துள்ளார்.

    முஸ்லிம் அடிப்படை வாதம் பௌத்தத்தை அழிக்கின்றது. பௌத்தர்களைப் பாதுகாக்காது போனால், அவர்களின் கடைசித் தருணம் இதுவாகும் என மியன்மாரின்  அசின் விராது பிக்கு  தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    எனது விசாவை இரத்து செய்வதற்கு இலங்கை முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் மத்தியில், இந்நாட்டுக்கு வருகைதர விசாவை வழங்கிய இந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பௌத்தர்கள் இன்று உலகில் மிகப் பயங்கரமான ஒரு நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். பௌத்தர்களுடைய அகிம்சைப் போக்கை ஒரு பலஹீனமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மதம் மாற்றுதல், பௌத்த விகாரைகளை அழித்தொழித்தல், மகா சங்கத்தினரை அபகீர்த்திக்கு உள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஜிஹாத் பயங்கரவாதம் செயற்பட்டு வருகின்றது.

    ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு உலக ஊடகங்கள் அமைதியன ஒரு போக்கைக் கைக்கொண்டு வருகின்றன.
    ஊடகங்களையும், பொருளாதாரத்தையும், தொழில்நுட்பத்தையும் கையில் ஏந்திய உலக சக்திகள் பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.

    ஜிஹாத்வாதிகளினால் உலக பௌத்த கருத்துக்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அடிப்படைவாத கொலைகாரர்களை நிரபராதிகளாகவும், அகிம்சை வழியில் செல்லும் பௌத்தர்களை குற்றவாளிகளாகவும் புடம்போட்டுக்காட்ட இந்த அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர்.

    இந்த அனைத்துக்கும் பின்னால் ஜிஹாத்வாதிகளும் அவர்களின் பின்னால் உள்ள ஊடகங்களும்தான் இருக்கின்றன. சர்வதேச ரீதியில் பார்க்கும் போது பௌத்தர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். இந்த சிறு தொகையினரை நாம் பாதுகாக்கத் தவறினால், இது பௌத்தர்களின் கடைசித் தருணம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

    எமது பௌத்த குடும்பங்கள் முக்கிய அங்கமாகும். அதனை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தக் காரியங்களை நிறைவேற்றுவதற்கும் உலக பௌத்தர்களின் பாதுகாப்புக்காகவும் இலங்கையில் செயற்படும் பொதுபல சேனாவுடன் எனது 969 எனும் அமைப்பு கைகோர்த்து செயற்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

    இறுதியாக நாட்டைக் கட்டியெழுப்பும் மகாசங்க ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன்இ இந்த உலகம் பௌத்த அகிம்சைவாதிகளின் அதிகாரத்தின் கீழ் சமாதான உலகமாக மாறட்டும் என பிராத்திக்கின்றேன் எனவும் அசின் விராது தேரர் மேலும் தெரிவித்துள்ளார் .
    bo3 bi 1
    bo6
    bo10 bo7 bo4 bo 2

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பௌத்தத்துக்கு அச்சுறுத்தலாம்!: தீர்வு கிடைக்காவிட்டால் நாட்டுக்கு புதிய தலைவரை ஏற்படுத்துவோம்: BBS Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top