திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சருமான கலாநிதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சனிக்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஏ.பி. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளின் போது அரசடிதோட்ட மருத்தவ நிலைய வீதி திறந்து வைக்கும் நிகழ்வும் கடந்த வருடம் புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் க.பொ.த (சாஃத) பரிட்சையில் சிறந்த அடைவுகளை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவொன்றிலும் அட்வென்சர் விளையாட்டு கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியின்
இறுதிப்போட்டியிலும் பிரதியமைச்சர் பங்கேற்றதாகவும் பொதுமக்கள் பிரதிநிதிகளினுடனான சந்திப்பும் இடம்பெற்;றதாகவும் பிரதியமைச்சரின் இணைப்பாளர் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன் கிழக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் கல்வியுரதிகாரிகள் பிரதேச பாடசாலை அதிபர்கள் ஊர்ப்பிரமுகர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொணடு சிறப்பித்தனர்;.September 01, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment