
பௌத்த
கடும்போக்குவாத நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும்
இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்த கடும்போக்குவாதம் அண்மைக்
காலமாக தலை தூக்கியுள்ளமை வருத்தமளிப்பதாகவும்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தாவலில் ,இலங்கையில்
சிறுபான்மை மதச் சமூகத்தவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது
அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும்
மதத் தலைவர்களினதும் பொறுப்பாகும் மதத்தில் பெயரால் வன்முறைகளில்
ஈடுபடுவது மதங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பானது மதக் குரோதங்களுக்கு எதிராக நாட்டின்
தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது ,மதங்களுக்கு இடையில்
நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் சில பௌத்த மதத் தலைவர்கள்
சிறுபான்மை சமூகத்தின் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட தூண்டுவதாகவும்
இதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும்போக்குவாதிகள் மட்டுமன்றி அவர்களுக்கு
பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்
மியன்மாரில் ரொஹினியா இனத்தவர்கள் மீது பாரியளவில் அடக்குமுறைகள்
பிரயோகிக்கப்பட்டு வருகிறது இலங்கையிலும் மியன்மாரிலும் பௌத்த மதத்தவர்கள்
மேற்கொண்டு வரும் குற்றச் செயல்கள் பௌத்த மத ஸ்தாபகரான கௌதம புத்தரின்
கொள்கைளுக்கு விரோதாமானது அது புத்தருக்கு இழைக்கும் துரோகமாக நோக்கப்பட
வேண்டுமெனவும் பான் கீ மூன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
புதிய மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நாளை கடமையை ஆரம்பிக்க உள்ளார்

ஐக்கிய
நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் இளவரசர் செய்யத் அல்
ஹூசைன் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளராக
ஆறு வருடங்களாக பணியாற்றிய தென் ஆபிரிக்காவை சேர்ந்த நவநீதம்பிள்ளைஇ
இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
அவரது வெற்றிடத்திற்கே இளவரசர் அல் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். அல்
ஹூசைன் ஜோர்தான் அரச வம்சத்தை சேர்ந்தவர் என்பதுடன் ஜெனிவாவுக்கான
அந்நாட்டின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
0 comments:
Post a Comment