திருகோணமலை புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் (02.09.2014) நடைபெறவிருந்த வெளிநோயாளர் பிரிவுக்கான இருமாடிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இடை நிறுத்தப்பட்டமைக்கான முழுப் பொறுப்பையும் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரே பொறுப்பேற்க வேண்டுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட மாகான சபை உறுப்பினர் வைத்தியசாலைக்குள் நுளைந்து, வைத்திய அத்தியேட்சகரைப் பயமுறுத்தி, இவ்வடிக்கல் நாட்டு விழாவை நடத்த விடக் கூடாது என அச்சுறுத்தியுள்ளார். இதனாலேயே இவ்விழாத் தடைப்பட்டது. இது சம்பந்தமாக வைத்திய அத்தியேட்சகர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
உண்மை நிலை இவ்வாறிருக்கையில் இன, மதஇ கட்சி பேதங்களை மறந்து, எல்லோரையும் அணைத்துக் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொண்டு வரும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் முன்மாதிரியான செயற்பாடுகளில் பொறாமை கொண்ட சில தீயசக்திகள், அமைச்சரின் நற்பெயருக்குக் கழங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளை சில இணையத்தளங்களில் வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.குறிப்பிட்ட மாகான சபை உறுப்பினர் வைத்தியசாலைக்குள் நுளைந்து, வைத்திய அத்தியேட்சகரைப் பயமுறுத்தி, இவ்வடிக்கல் நாட்டு விழாவை நடத்த விடக் கூடாது என அச்சுறுத்தியுள்ளார். இதனாலேயே இவ்விழாத் தடைப்பட்டது. இது சம்பந்தமாக வைத்திய அத்தியேட்சகர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இவ்வாறு சிலரின் கைக்கூலிகளாக செயற்பட்டு, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ள இணையத்தளங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment