எம்.வை.அமீர்: கடந்த 33 வருடங்களாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட உதவியாளராக கடமையாற்றி வரும் சிரேஷ்ட ஆய்வுகூட உதவியாளர், எம்.ஐ.எம்.இஸ்மாயிலை கௌரவிக்கும் நிகழ்வு கிழக்குப் பலகலைக்கழக நல்லையா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் இடம்பெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்கள் இதுவரையும் வடகிழக்குக்கு வெளியேயே இடம்பெற்று வந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுமுக நிலையைத் தொடர்ந்து, குறித்த மாநாடு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலாவது இடம்பெற்றது குறிப்படத்தக்கது.
இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆய்வுகூட உதவியாளர்கள் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் பதிவாளர் ரீ.மகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகாலம்முதல் ஆய்வுகூட உதவியாளராக கடமையாற்றிவரும் சிரேஷ்ட ஆய்வுகூட உதவியாளர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் குறித்த பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூட அபிவிருத்தியில் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் ஆய்வுகூட உதவியாளர்களை ஒன்றுகூட்டி அவர்களை வடகிழக்கு பல்கலைக்கழகங்களுடன் ஒன்றிணைத்து சிறந்த முறையில் செயற்பட்டமைக்காகவும் இங்கு கௌரவம் வழங்கப்பட்டது.
அகில இலங்கை சமாதான நீதவானாகிய எம்.ஐ.எம்.இஸ்மாயில் கிழக்கு பல்கலை கழகத்தின் முதலாவது முஸ்லிம் ஆய்வுகூட உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது நடப்பு ஆண்டுக்கான நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக கே.ஜி.ஹரிஸ்சந்திர வண்டாரவும் செயலாளராக பீ.வீ.ஆர்.பீ.தம்மிக்கவும் பொருளாளராக றுஆ.சிசிர பண்டாரவும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை சிரேஷ்ட ஆய்வுகூட உதவியாளர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் அனைத்துப்பல்கலைக்கழக ஆய்வுகூட உதவியாளர் சங்கத்தின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment