• Latest News

    September 05, 2014

    பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை ஆணையாளருக்கு வழங்க இடமளிக்க முடியாது: ரணில்

    340716297ranilA
    இலங்­கையின் பௌத்த பிக்­கு­களின் அதி­கா­ரங்­களை ஆணை­யா­ள­ருக்கு வழங்க இட­ம­ளிக்க முடி­யாது. இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற நிறை­வேற்று குழு நிய­மிப்­பது தொடர்­பான ஆலோ­ச­னையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்போம் என தெரி­வித்த எதிர்க்­கட்சி தலை­வரும் ஐ.தே.க. தேசிய தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்கஇ தம் ஆட்சி பௌத்த பிக்­கு­களின் அதி­கா­ரங்­களை குறைக்­க­வில்லை என கூறினார். குறித்த ஆலோ­ச­னையை நிறை­வேற்ற வேண்டும். இல்­லையேல் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்­ச­ரித்தார். 

    கொழும்பு விஜ­ய­தர்ம மன்­றத்தில் இடம் பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் 1980 ஆம் ஆண்­டு­களில் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வினால் ஆரம்­பிக்­கப்­பட்ட பௌத்த திணைக்­க­ளத்­தி­னூ­டாக பணிப்
    ­பா­ளரை நிய­மிக்­காமல் ஆணை­யா­ளரை நிய­மித்து பிக்­கு­களை அதி­கார பீடத்தில் வைத்­தி­ருக்க வேண்டும் என்­ப­த­னா­லாகும். இந்­நி­லையில் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பிக்­கு­களின் அதி­கா­ரத்தை குறைத்து அதன் அதி­கா­ரங்­களை ஆணை­யாளர் நாய­கத்­திற்கு வழங்­கி­யுள்­ளது. இது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும்.

    இது தொடர்பில் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்று குழு நிய­மிக்­கு­மாறு பாரா­ளு­மன்­றத்தை வலியுறுத்துவோம் இதற்கமைய ஆளும் தரப்பு தவறினை ஒப்புக் கொள்ளா விட்டால் இந்த ஆலோசனையை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும்.
    வீரகேரரி -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பௌத்த பிக்குகளின் அதிகாரங்களை ஆணையாளருக்கு வழங்க இடமளிக்க முடியாது: ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top