• Latest News

    September 05, 2014

    பொல்துவை பாலம் ஜனாதிபதியினால் இன்றிரவு திறந்து வைக்கப்படும்!

    அழகிய தியவன்னா ஆற்றினூடாக (கொள்ளுப்பிட்டி -ஸ்ரீ ஜயவர்த்தனபுர) செல்லும் பொல்துவை பாலம் இன்றிரவு 7.00மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும்.

    மஹிந்த சிந்தனையின் எதிர்கால இலக்குகளின் படி முன்னேற்றகரமான பாதை அமைப்புக்களை கொண்ட நாட்டை உருவாக்கும் நோக்கத்துடனேயே இந்த பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
    பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் கடற்றொழில் விவகார அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்வர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொல்துவை பாலம் ஜனாதிபதியினால் இன்றிரவு திறந்து வைக்கப்படும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top