மூதூர் முறாசில்: கிழக்கு மாகாண
சபை உறுப்பினராக மூதூரைச் சேர்ந்த சட்டத்தரணி முஹம்மட் லாஹிர் ஜெய்னுதீன்
இன்று வெள்ளிக் கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்ரம
முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், திருகோணமலை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்
எம்.எஸ்.உதுமான்லெப்பை, சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், தவிசாளர்
டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலபதி,மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,
ஆளுநரின் செயலாளர் கே.சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment