• Latest News

    September 01, 2014

    அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்!

    எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள்பாகிஸ்தானில் அரசு தொலைக்காட்சியான பிடிவியின் தலைமையகத்தை முற்றுகையிட்டிருந்த எதிர்க்கட்சி ஆர்வலர்களை அரச பாதுகாப்பு படையினர் வெளியேற்றியுள்ளனர்.
    எதிர்க்கட்சியினர் இரண்டு வாரகாலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்
    ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாய் நுழைய நின்றுபோயிருந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களாகிய கிரிக்கெட்டிலிருந்து அரசியலுக்கு வந்த இம்ரான்கானும், செல்வக்குமிக்க மதபோதகருமான தாஹிருல் காதிரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்கள் நடந்திருந்தன.

    பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டர்க்காரர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

    கிட்டத்தட்ட இரண்டு வாரகாலமாக அமைதிகரமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வன்முறை வெடித்திருந்தது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top