இலங்கை முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதை
விடுத்து சாரி உடுத்த வேண்டும் என விமல் வீரவன்சவின் கட்சி
தெரிவித்துள்ளது. உடையில் அரபிய கலாசாரத்தை பின்பற்றுவது இலங்கை
சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினையைதோற்றுவிக்கும் எனவும் ஒருசில
முஸ்லிம் குழுக்கள் உடையில் அரபிய கலாசாரத்தை வேறு நோக்கத்துடன்
ஊக்குவிப்பதகவும் அவரின் கட்சி தெரிவித்துள்ளது
சாரி சிங்கள ,முஸ்லிம் மக்கள் மத்தியில்
வேற்றுமை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது
.அமைச்சர் விமலின் ஊடக பேச்சாளர் முசமில் என்பவர் இந்த கருத்துக்களை
முன்வைத்துள்ளார் .
ஈரானைப் போல் ஜாதி மத பேதத்தை
இலங்கைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாகவும். அவற்றை தோற்கடிக்க
நாம் புத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment