ஆதம்பாவா வாக்கீர் ஹுசைன்;
கடந்த ஊவா தேர்தலின் பின் மத்திய ஆளும் தரப்பிலும், மற்றும் எதிர் தரப்பிலும் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம்கள் ஏற்பட்டிருப்பது ஒரு வகை அரசியல் மாற்றத்துக்கு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் நாட்டின் எல்லா பகுதியிலும் ஏற்பட்டிருப்பது கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாலும் , இந்த எதிர்கால மாற்றத்தில் அல்லது மாற்றத்தின் போது முஸ்லிம் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் தாண்டி வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கபோகின்றது என்பது மட்டும் உண்மை.
கடந்த ஊவா தேர்தலின் பின் மத்திய ஆளும் தரப்பிலும், மற்றும் எதிர் தரப்பிலும் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம்கள் ஏற்பட்டிருப்பது ஒரு வகை அரசியல் மாற்றத்துக்கு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் நாட்டின் எல்லா பகுதியிலும் ஏற்பட்டிருப்பது கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாலும் , இந்த எதிர்கால மாற்றத்தில் அல்லது மாற்றத்தின் போது முஸ்லிம் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் தாண்டி வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கபோகின்றது என்பது மட்டும் உண்மை.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது அவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்து சற்று அனுமானிக்ககூடியதாக இருந்தாலும், அது ஒரு போதும் அந்த கட்சிக்கு வாக்களித்த , வாக்களிக்கபோகும் மக்களின் விருப்பதிற்கு எதிராகவே இருக்கும். இங்கு ஒரு விடயத்தை கட்டாயம் நான் சுட்டி காட்டவேண்டும். இலங்கை அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஒன்றே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வரலாற்று துரோகம்களை செய்துள்ளது என்றால் அது ஒன்றும் ஆச்சரியப்படகூடிய ஒரு விடயம் அல்ல. அதில் முதலாவது வரலாற்று துரோகமாக என்னைபொறுத்த வரையில் 18 ஆம் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததையும், இரண்டு வருட ரணிலின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததும். இவ்வாறு இரு பெரிய ஆளும் கட்சிகளுக்கு நிலைமைக்கு ஏற்றாப்போல தலையையும், வாலையும் காட்டி , மறைமுகமாக முஸ்லிம் சமூகத்தை காட்டி கொடுத்து இக்கட்டில் தள்ளியும் விட்டு விடுகின்றனர்.
அடுத்து, இந்நாட்களில் ஊவா தேர்தலின் பின், முஸ்லிம் அமைப்புக்களின் அல்லது கட்சிகளின் ஒன்று சேர்ந்த கூட்டணி அரசியல் பற்றிய செய்திகளும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் குறிப்பாக சமூக தளம்களில் உருவாகியுள்ளது ஒரு தீர்க்கமான அல்லது சாதகமான ஒரு முடிவை நோக்கிய நம் அரசியல் பயணத்தில் மைல் கல்லாக அமையலாம். இருந்தும் அது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது ஒரு விடை அளிக்க முடியாத கேள்வியாகவே இருக்கும் இங்கு நாம் ஒன்றை அவதானிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. நம் அரசியல் தலைவர்களின் ஒற்றுமை என்பது ஒரு தேர்தலையோ அல்லது வெறும் ஆசனம்களை பெற்றுக்கொள்வதில் மட்டும்தான் இருக்க வேண்டுமா? இன்றைய கால கட்டத்தில் , அரசியலும், அல்லது அரசியல் கட்சிகளும் தமது கட்சிகளின் வாக்கு எண்ணிக்கைக்குள் சுருங்கி விட்டது போலவே தோனுகிறது.
மேற்குலக அரசியல் சித்தாந்த்தை பின்பற்றி அரசியல் செய்யும் நம் தலைவர்களிடம் நான் அதை எதிர்பார்கவும் முடியாது. அதாவது மக்களின் வாழ்வு, இருப்பு, உரிமை, சமய விழுமியம்களை பின்பற்ற விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பவற்றை கண்டு கொள்ளாது , வெறும் ஒரு பொருளாதார அல்லது பணம் சார்ந்த விடயம்களை மட்டுமே இன்று கருத்தில் கொண்டு சகல அரசியல் கட்சிகளும் சுழன்று கொண்டிருப்பது இன்றைய நாட்களில் நான் தினமும் காணும் அல்லது கடந்து போகும் ஒரு செய்தியே.
இப்போது எழுந்துள்ள இந்த ஒற்றுமை கோசம், ஏன் சில மாதம்களுக்கு முன்,
அளுத்கமை சம்பவத்தின் பின் எழவில்லை . அப்போது அதன் தேவை உணரப்படவில்லையா ?
அல்லது நமக்கேன் வம்பு என்று கட்சிகளின் தலைமைகள் ஒதுங்கி கொண்டனவா ?
தேர்தல்கள் என்று வந்தவுடன் ஒற்றுமை பட துணியும் இவர்களால் ஏன்
ஆகக்குறைந்தது ஒன்றாக அமர்ந்து ஒரு செய்தியாளர் மாநாட்டில் தமது
கண்டனங்களையும் ,எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாது. ஆக இங்கு இவர்களின் சுய நலமும், எதிர்பை கண்டு அஞ்சும் கோளைத்தனமுமே ஓங்கி நிற்கின்றது.
நிச்சயமாக , ஊவா தேர்தில், முஸ்லிம் காங்கிரஸ் உம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உம் செய்து கொண்ட உடன்படிக்கை ஒரு வெள்ளோட்டமே அன்றி வேறில்லை . அது எந்த அளவுக்கு தொடரும் என்பது சில வேளை மக்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஜனாதிபதியின் கைகளில் தான் தங்கியும் இருக்கும் ஒரு அஸ்திரமாக கூட இருக்கலாம்.
இங்கு , குறிப்பாக கிழக்கில், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒற்றுமைப்பட்டு ஒரே சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எனது அவாவும் , இருந்தும் , அதற்கு முன் , இப்போது இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சகல ஒடுக்குமுறைகளுக்கும் , அரச ஆதரவுடன் இயங்கும் காவி உடை பயன்கரவாததுக்கும் எதிராக இவர்களால் ஒன்று பட முடியுமா ?? இங்குதான் நாம் இவர்களின் அரசியல்
சார்ந்த நிலைப்பாட்டை பற்றி யோசிக்க முடியுமே தவிர, வெறும் தேர்தல்களுக்காக சேரும் தற்கால கூட்டணிகளில் சமூகத்துக்கான குரல்கள் ஒங்காது என்பது என் கருத்து.
கூட்டணி பற்றி பேசும் இவர்கள், அதற்கு முன் , மக்களின் மனம்களின் எண்ண ஓட்டத்தையும் அறிய முற்படவேண்டும். வெறும் கூட்டணி அமைத்து, ஊவா தேர்தல் போன்று, வாக்குகளை பிரித்து, அதன் மூலம் எதோ ஒரு பேரினவாத கட்சியை பலமாக்கும் முயற்சியில் கூட அந்த கூட்டணி செயற்படலாம்.
இங்கு எல்லாமே கைவிட்டு சென்று எடுப்பார் கைபுள்ளை நிலைக்கு நம் சமூகத்தை ஆளாக்கி வைத்திருக்கும் நம் சமூக தலைமைகளின் முன் இருக்கும் இறுதி அச்திரமே இந்த ஒன்றிணைந்த கூட்டணி. அது மிகவும் திட்டமிடப்பட்டு , மத்திய அரசுடன் பேரம் பேசும் சக்தியாக வர வேண்டுமே தவிர, வெறும் ஒரு அரசுக்கு முட்டு கொடுக்கும் சக்தியாக இருக்க கூடாது என்பதே எனது விருப்பம் . இறுதியில் அது நமக்கு ஆப்பாக வந்து பின் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகவே மாறிவிடும்.
ஆக, ஒற்றுமை பற்றி பேசும் இவர்கள் , முதலில் ஒன்றுபட்டு சமூக இருப்புக்கான போராட்டத்திற்கு குரல் கொடுக்கட்டும், அதன் பின் கூட்டணி பற்றி இவர்கள் என்ன மக்களே முடிவு செய்வர்.
0 comments:
Post a Comment