எம்.ஐ.எம்.அஸ்ஹர்:மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப்
அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி
எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர்
பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில்
இடம்பெற்றது.
கல்லூரியின் மஹிந்தோதய தொழில்நுட்ப
கூடத்தின் முன்னால் அதிதிகளினால் நினைவு தின மரம்கள் நட்டி
வைக்கப்பட்டதுடன் ,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரீஸின் சுமார் 10 இலட்சம் ருபா செலவில்கல்லூரியின்
எம்.எஸ்.காரியப்பர் மண்டப புனருத்தான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு
மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் ஞாபகார்த்த உரையும் துவாப் பிரார்த்தனையும்
இடம்பெற்றது.
0 comments:
Post a Comment