
இலங்கையிலுள்ள
இந்துக்களை கிறித்தவ , இஸ்லாம் மதங்களின் பிடியில் இருந்து காப்பாற்றப்
போவதாகவும் கடும்போக்கு பொதுபல சேனா சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டில்
தெரிவித்திருந்தது , ஆனால் பொது பல சேனாவின்
மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், தமிழ்
பேசும் சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் நடந்துவருவதாகக்
கூறியுள்ளதுடன் சிங்கள- பெளத்த ஆட்சியாளர்களினாலேயே வடக்கு கிழக்கில்
இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தையா நீலகண்டன் மேலும் குற்றம்
சாட்டியுள்ளார் .
அதேபோன்று இனத்துவேஷ கருத்துக்களையும்
மதவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துவரும் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக
இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளமை தொடர்பில் கிறிஸதவ ஒத்துழைப்பு
இயக்கத்தின் அமைப்பாளர் அருட்தந்தை எம். சக்திவேல் விசனம் வெளியிட்டுள்ளார்
.
பொது பல சேனாவுக்கு அரசாங்கத்தின் ஆதரவு
இருப்பதாகவும் அந்த அமைப்பின் கருத்துக்களை அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே
கருத வேண்டியிருப்பதாகவும் அருட்தந்தை சக்திவேல் மேலும் கூறியுள்ளார்