எமது
நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை
தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என
ஏற்றுக்கொண்டு ”இலங்கை” என்ற பெயரையும் இல்லாதொழித்து “சிங்ஹலே” என பெயரிடப்பட வேண்டும் என கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபலசேனா வலியுறுத்தியுள்ளது
பெளத்தத்தை விடுத்து வேறு எந்த மதத்தையும்
நாட்டுக்குள் வியாபிப்பது, அதற்கான திட்டங்களை வகுப்பது அல்லது வெளிநாட்டு
தேசிய உதவிகளை பெற்று மதங்களை வளர்ப்பதை தடை செய்ய வேண்டுமென்றும்
தெரிவித்துள்ளது .
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக எமது நாடு பல்லினங்கள் பல மதத்தவர்கள்
வாழும் நாடு என்றும் சர்வமத அமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த மாயை
தகர்க்கப்பட வேண்டும். சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்வதோடு, ஒரே
நாடு, ஒரே இனம், ஒரே சட்டம் என்ற கொள்கை அரச கொள்கையாகவும் பெளத்தம் அரச
மதமாகவும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
வெள்ளைக்காரன் வைத்த ”இலங்கை” என்ற பெயரை
தூக்கியெறிந்து விட்டு ”சிங்ஹலே” என நாட்டின் பெயர் மாற்றப்பட வேண்டும்.
தற்போதைய தேசிய நாட்டில் பிரிவினை வாதத்தை பிரதிபலிக்கின்றது. எனவே தேசியக்
கொடி மாற வேண்டும்.1815ஆம் ஆண்டுக்கு முன்பு நாம் உபயோகித்த சிங்கக்
கொடியை மீள தேசிய கொடியாக்க வேண்டும்.
நாட்டின் தேசிய தினமாக ”வெசாக் தினத்தை”
பிரகடனப்படுத்த வேண்டும்.பெளத்தத்தை விடுத்து ஏனைய மதங்களின் வளர்ச்சிக்காக
தேசிய சர்வதேச நிதி வழங்கல் தடை செய்யப்பட வேண்டும். ராஜ்ஜியத்தின் மதத்
தலைவராக ”சங்கராஜ மகாநாயகரை” நியமித்து அவர் தலைமையில் 50 பேர் அடங்கிய
பெளத்த குருமார் குழுவை நியமிக்க வேண்டும். இக்குழு ஆட்சியாளர்களுக்கு
ஆலோசனை வழங்கும் குழுவாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் டிலந்த விதானகே
தெரிவித்துள்ளார் .
அதேவேளை தமது கோரிக்கைகளை ஏற்றுகொண்டு
செயல்பட தயாராகும் சிங்கள பெளத்த ஜனாதிபதி வேட்பாளருக்கு 50 இலட்சம்
வாக்குகளை தாம் பெற்றுகொடுப்போம் எனவும் நாட்டின் உள்ள 5000 பன்சலைகள்
மூலமாக அந்த வாக்குகளை பெற்றுகொடுப்போம் எனவும் பொது பல சேனாவின் செயலாளர்
ஞானசாரத் தேரர்தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment