இலங்கையின் நீர்பாசன, கிராமிய மின்சாரத் திட்டங்களில் பாரிய அளவில் உதவி வரும் ஈரானிய அரசாங்கத்திற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி வரும் குழுக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அயல் நாடான ஈரான் கரிசனை செலுத்துவதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டது.
அயல் நாடு என்ற வகையில் பிராந்திய நாடுகளில் ஏற்பட்டு வரும் மோதல்களைத் தவிர்ப்பதற்கு ஈரானுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமையைப் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் அந் நாட்டு நீதியமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.
இலங்கையின் நீதியமைச்சர் ஹக்கீம் முன்னர் ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் சட்ட ஆலோசனை மன்றத்தின் தலைமைப் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது பதவிக் காலத்தில் அவர் நல்கிய பங்களிப்புக்காக விசேட கௌரவிப்புக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அமைச்சர் ஹக்கீமுடன் நீதியமைச்சின் செயலாளர் கமலினி த சில்வா, அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் ஈரான் சென்றனர்.
0 comments:
Post a Comment