
எனவே கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் எடுத்திருக்கும் தீர்மானத்தில் மாற்றம் கொண்ட வர வேண்டும் என தெரிவித்து தேசிய கல்வி ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி மாவட்டக் கிளை அறிக்கையொன்றை வெளியீட்டுள்ளது.
கிழக்குக் கல்விக்குப் பொறுப்பாக இருந்து கடந்த காலங்களில் பல்வேறு வகையான சேவைகளையும், சாதனைகளையும் கல்வித்துறையில் ஈட்டியுள்ளமை
கிழக்கு மாகாணக் கல்விச் சமூகத்திற்குத் தெரிந்த விடையமாகும். தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை, க.பொ.த சாதாரன மற்றும் க.பொ.த உயர்தரப் பரிட்சைகள் என்பவற்றில் உயர்வான அடைவுமட்டம் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கிழக்க மாகாணம் விருத்தி கண்டுள்ளது.
இன்;நிலையில் சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக முன்னேறிவரும் கிழக்கின் கல்வி அபிவிருத்தியை பாழ்படுத்தி விடமுடியாது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் வினைத்திறனான பாடசாலை மேற்பார்வை,தலைமைத்துவம், விடாமுயற்ச்சி,ஆசிரிய வளங்களை சமனாக பங்கீடு செய்தல் தியாக மனப்பான்மை, சேவைமனப்பான்மை போன்ற விடையங்கள் கிழக்கு மாகான கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையாக உள்ளது.
ஆகவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி கல்முனை கல்வி மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.
0 comments:
Post a Comment