• Latest News

    September 06, 2014

    சிறுவன் சடலமாக மீட்பு - மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

    லிந்துலை - மட்டுக்கலை பகுதியில் காணாமல் போன சிறுவன், இன்று காலை தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    யோகநாதன் சிவதர்ஷன் என்ற சிறுவனின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் சிறுவன் காணாமல் போனமை குறித்து கடந்த 4ம் திகதி பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

    எனினும் பொதுமக்களால் சடலத்தை கண்டுப்பிடிக்கும் வரை லிந்துலை பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கோரி இன்று காலை 09.00 மணிமுதல் தற்போது வரை தலவாக்கலை நகரசபைக்கு முன்னால் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    குறித்த சடலம் நீதவானின் மரண விசாரணைக்காக அதே இடத்தில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

    மேலும் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


    (அத தெரண )
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுவன் சடலமாக மீட்பு - மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top