• Latest News

    September 24, 2014

    மூன்று மார்பகங்களைக் கொண்ட யுவதி ; தன்மீதான ஈர்ப்பை குறைப்பதற்கான நடவடிக்கை என்கிறார்

    அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் மூன்று மார்பகங்களுடன் காணப்படுகிறார். 21 வயதான ஜெஸ்மின் ட்ரைடெவில் எனும் இந்த யுவதி பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் மூன்றாவது மார்பகத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

    பொதுவாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே மார்பகங்களை பிளாஸ்திக் சத்திர சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொள்வதற்கு மேற்குலகப் பெண்கள் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆனால், தான் மூன்றாவது மார்பகத்தை உருவாக்கிக் கொண்டமைக்கு காரணம் தன் மீதான மற்றவர்களின் ஈர்ப்பை குறைப்பதற்கே என்கிறார் ஜெஸ்மின்.
    இச் சத்திரசிகிச்சைகளுக்காக 20,000 அமெரிக்க டொலர்களை அவர் செலவிட்டுள்ளாராம்.

    மூன்றாவது மார்பகத்தை உருவாக்கிக் கொள்வதற்கு தான் தீர்மானித்த பின், சுமார் 60 மருத்துவர்களை சந்தித்து இதற்கான கோரிக்கையை தான் முன்வைத்ததாகவும் ஆனால் அவர்களில் எவரும் அச்சத்திர சிகிச்சையை செய்ய முன்வரவில்லை எனவும் ஜெஸ்மின் கூறுகிறார்.

    இறுதியாக தான் சந்தித்த மருத்துவர் ஒருவர் மாத்திரம் இந்த சத்திர சிகிச்சையை செய்வதற்கு சம்மதித்ததாகக் கூறும் ஜெஸ்மின், தனது உண்மையான பெயரை  வெளியிடவில்லை.

    'இறுதியாக நான் சந்தித்த மருத்துவரைத் தவிர ஏனைய மருத்துவர்கள் இச்சத்திரசிகிச்சையை செய்ய மறுத்துவிட்டனர்.

    இது தமது மருத்துவத் தொழிலின் நெறிமுறைகளுக்கு முரணானது என அவர்கள் கூறினர். அதனால் இச்சிகிச்சைக்கான மருத்துவர் ஒருவரை கண்டறிவது கடினமானதாக இருந்தது' என ஜெஸ்மின் கூறினார்.

    மசாஜ் செய்யும் ஊழியராக இரு வருடகாலம் பணியாற்றியதன் மூலம் சேகரித்த பணத்தை இச்சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மூன்றாவது மார்பகத்தை உருவாக்கிக் கொள்ளும்  திட்டத்தின் மூலம், அவர் எதிர்பார்த்ததைப் போன்று, ஜெஸ்மின் மீதான மற்றவர்களின் குறிப்பாக ஆண்களின் ஈர்ப்பு குறைவடைந்ததா அல்லது அதிகரித்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவரின் குடும்பத்தினர் இந்த விபரீத நடவடிக்கையினால் வெறுப்படைந்துள்ளனர்.

    தற்போது தனது தாயும் சகோதரியும் தன்னுடன் பேசுவதில்லை என ஜெஸ்மின் கூறுகிறார்.

    'புகழ்பெறுவதற்காகவோ அல்லது இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்காகவோ மூன்றாவது மார்பகத்தை நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. என் மீதான ஆண்களின் ஈர்ப்பு குறைவடைய வேண்டும் என நான் விரும்பினேன்.
     
    ஏனெனில் யாரையும் நான் காதலிக்க விரும்பவில்லை' என வானொலியொன்றுக்கு அளித்த செவ்வியில் ஜெஸ்மின் கூறினார்.

    ஆனால், ஏன் யாரையும் காதலிக்க விரும்பவில்லை என அவரை நேர்காணல் செய்தவர்கள் கேட்டபோது அக்கேள்விக்கு ஜெஸ்மின் பதிலளிக்கவில்லை.

    தனது மூன்று மார்பகங்களும் ஒரே மாதிரியானவை அல்ல என்ற போதிலும் இச்சத்திரசிகிச்சை குறித்து தான் திருப்தியடைவதாக தெரிவித்துள்ளார்.

    அதேவேளை, இந்த மேலதிக அங்கத்தினால் தனது ஆடைகளையும் ஜெஸ்மின் வித்தியாசமாக வடிவமைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தான் அணியும் நீச்சலுடைகளை வீட்டிலேயே அவர் வடிவமைத்துக் கொள்கிறாராம்.

    கடையில் ஒரே மாதிரியான இரு பிகினிகளை வாங்கி, அவற்றை வெட்டி ஒன்றிணைப்பதன் மூலம் தனது உடலுக்குப் பொருத்தமானதாக மாற்றிக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூன்று மார்பகங்களைக் கொண்ட யுவதி ; தன்மீதான ஈர்ப்பை குறைப்பதற்கான நடவடிக்கை என்கிறார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top