• Latest News

    September 18, 2014

    ஊவாவில் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்..பெருந்தொகையான பணத்துடன் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை விலை பேசும் நடவடிக்கை அம்பலம்

    ஊவா மாகாணசபைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் 18-09-2014 புதன்கிழமை நள்ளிரவோடு முடிவுக்கு வந்துவிட்டன.  ஏற்கெனவே பதுளை மாவட்ட முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ஊவாவில் நிகழக்காத்திருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு தம்முடைய ஆதரவுகளை உறுதிப்படுத்தியிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் ஊவாவில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ள கூட்டு கட்சி அரசாங்கத்தின் ஏஜென்டுகள் என்பது பலபக்கங்களிலும் நிரூபனமாகியிருக்கின்றது.
    இவ்வாறான நிலையில் தேர்தல்கால இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகளின் போது ஊவாவில் தலை காட்டாத முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பெருந்தொகையான பணத்துடன் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை விலை பேசும் நடவடிக்கை அம்பலமாகியிருக்கின்றது.

    இன்று பொறகஸ் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தனிப்பட்ட சந்திப்பொன்றில் குறித்த விடயம் அம்பலமாகியிருக்கின்றது. மேற்படி விடயம் தொடர்பாக குறித்த பிரதேசத்தின் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.

    குறித்த பிரதேச மக்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊவா தேர்தல் செயற்குழுவினைத் தொடர்பு கொண்டபோது செயற்குழு உறுப்பினர் குறித்த அமைச்சர் வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் இவ்வாறு வாக்குகளை விலைபேசி வாங்கி மன்னார் முஸ்லிம்களை அரசியல் அடிமைகளாக ஆக்கியிருக்கின்றார் என்ற ஆதங்கம் வடக்கு மக்களிடம் நிலவுகின்றது.

    இதே நிலையினை ஊவாவிலும் அறிமுகம் செய்ய விளைகின்றார் போலும் எனத் தெரிவித்ததோடு: முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்திடம் அற்ப விலை கொடுத்து வாங்கி அவற்றை அதிக விலைக்கு ஆளும் தரப்பினர்க்கு விற்கும் கேவலமான செயலைத் தொடர்ந்தும் செய்கின்றனர்.

    இத்தகைய ஜனநாயக விரோத செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம், மேற்படி விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும் அதே சந்தர்ப்பத்தில், பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரினூடாக பொலிஸ் முறைப்பாடொன்றினையும் பதிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிகாட்டல்களை வழங்கியதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊவாவில் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்..பெருந்தொகையான பணத்துடன் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை விலை பேசும் நடவடிக்கை அம்பலம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top