காஸா
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஹமாஸிடம் இஸ்ரேலிய
இராணுவம் தோல்வி அடைந்து. அதேவேளை இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து
வெளியேற்றப்பட்டது என இஸ்ரேலின் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்;
“காஸா பகுதிகளில் இஸ்ரேல் குடிமக்களின்
விவகாரத்தில் அரசு எந்த
காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை,
அடுத்த வாரம் ஃபலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முன்வைக்கும்
நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
பலத்தை பயன்படுத்தி மட்டும் போரில்
வெற்றிபெற்றுவிடலாம் என்பது தவறானது என குறிப்பிட்டுள்ள அவர், மேற்கு கரை
மற்றும் காஸாவோடும் காட்டிவரும் பிரிவினை கொள்கையை இஸ்ரேல்
நிறுத்தவேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment