இலங்கை முஸ்லிம் இசைக் கலைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான தலை சிறந்த இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகருமான, தொழிலதிபர் என்.எம். நூர்தீனின் மறைவு இஸ்லாமிய இசைத் துறையிலும், இலக்கியத்துறையிலும் பாரிய வெற்றிடமொன்றை ஏற்படுத்தியிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
எனது குடும்ப நண்பர் இசைக்கோ என்.எம். நூர்தீனின் மறைவுச் செய்தியை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன்.
தென் இந்தியப் பூர்வீகத்தைக் கொண்ட இசைக்கோ என்.எம். நூர்தீன் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, மலேஷியா, சிங்கபூர் ஆகிய நாடுகளிலும் பிரசித்தமடைந்திருந்த முன்னணி இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், பாடகருமாவார், தொழிலதிபராக இருந்த அவர் தமக்கே உரித்தான விதத்தில் இஸ்லாமிய, சமூக நலன், ஒற்றுமை, இன ஐக்கியம் குறித்த பாடல்களை எழுதியதுடன், தனித்துவமான இசை வடிவங்களையும் அறிமுகப்படுத்தினார்.அமைச்சரின் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
எனது குடும்ப நண்பர் இசைக்கோ என்.எம். நூர்தீனின் மறைவுச் செய்தியை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன்.
கொழும்பில் அவர் தனிப்பட்ட இசைக் கூடம் ஒன்றையே சொந்தமாக வைத்திருந்தார். முஸ்லிம் கலைஞர்கள் பலரின் உருவாக்கத்திற்கும் அவர் பெரிதும் உதவியுள்ளார். ஊடகவியலாளர்களுடனும் அவர் நெருங்கிப் பழகினார்.
இசைக்கோ நூர்தீனுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸை அருள வேண்டுமென பிராத்திப்பதோடு, குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
0 comments:
Post a Comment