• Latest News

    September 26, 2014

    மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

    மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
    நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் அதன் தலைவர் சட்டத்தரணி வினோபா இந்திரன், செயலாளர் சட்டத்தரணி ஆர். கண்ணன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை (26) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

    முன்னைய ஒப்பந்தக்காரரால் கைவிடப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றக் கட்டடம் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம் கட்டடம்  என்பன கட்டடத் திணைக்களத்தால் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம் நிரந்தர நீதவான் நீதிமன்றமாக இயங்கவிருப்பதாகவும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கட்டடத்தின் சில விஸ்தரிப்பு வேலைகளுக்காக மிக விரைவில் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாகவும் நீதியமைச்சர் ஹக்கீம் தம்மைச் சந்தித்த மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். 

    அமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ..கே.டி.டி.டி. அரந்தர, அமைச்சின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

    நீதி அமைச்சரை சந்தித்த மட்டக்களப்பு சட்டத்தரணி சங்க தூதுக்குழுவில் சட்டத்தரணிகளான எஸ்.எம். முகம்மது அமீன், பி. பிரேம்நாத், எஸ். சுலோஜன், கே. நாராயணபிள்ளை ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். 
    டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top