• Latest News

    September 30, 2014

    மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரம் (ஏ.ரீ.எம்.) நிறுவ வேண்டும்

    எஸ்.அஸ்ரப்கான்: 
    பிரயாணிகளின் நலன் கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற ,யந்திரம் (ஏ.ரீ.எம்.) ஒன்றினை பொருத்துவதற்கு ஆவன செய்யும்படி பொதுமக்களும் பிரதேசவாசிகளும் வேண்டுகொள் ஒன்றை விடுக்கின்றனர்.
     
    கொமர்ஷல் வங்கியின் கொழும்பு பிரதான முகாமைத்துவப் பணிப்பாளர் விசேட கவனமெடுக்க வேண்டிய ,வ்விடயம் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும்.

    நாட்டின் நாலாபாகங்களிலும் புகையிரத சேவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களது பயணங்களை புகையிரதத்தின்  மூலமே மேற்கொள்கின்றனர். அதே போல் வெளிமாவட்ட மக்களும் அண்மைக் காலமாக கிழக்கை நோக்கி புகையிரதத்தில் தினமும் வருகை
    தந்தவண்ணமுள்ளனர். ,வர்கள் சுற்றலா பிரயாணிகளால் கவரப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேச ரம்மியமான சூழலில் தங்களின் விடுமுறையினை குடும்பத்தினருடன் கழிப்பதற்காகவே வருகின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணிப்பதாக அறிய முடிகின்றது.

    பிரயாணிகள்; பயணங்களை மேற்கொள்ளும் போது தங்களின் பாதுகாப்பு கருதி பணத்திற்கு பதிலாக உரிய வங்கிகளின் டெபிட் வீசா அட்டை மூலமே பெரும்பாலும் பணப்பறிமாற்றங்களை செய்வதுடன் அவர்களின் தேவைக்கேற்ற தொகையினையும் ஏ.ரீ.எம். மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

    கொமர்ஷல் வங்கியானது புகையிரதப் பிரயாணிகளின் நலன் கருதி கொழும்பு கோட்டை, மருதானை, ராகம, கம்பஹா, வெயாங்கொட, கணேமுல்லை, பொல்கஹவெல, கண்டி, பாணந்துறை, மொரட்டுவை, காலி, கந்தான, கிளிநொச்சி ஆகிய புகையிரத நிலையங்களில் ஏ.ரீ.எம். ,யந்திரங்களை பொருத்தி வாடிக்கையாளர்களுக்கான சேவையினை வியாபித்துள்ளமை பாராட்டத்தக்க விடமயமாகும். அதே போல் பிரயாணிகள் அதிகமாக வருகைதரும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலும் ஏ.ரீ.எம். ,யற்திரம் பொருத்தப்படுமாயின் விஷேடமாக பிரயாணிகள் மிகவும் பயனடைவார்கள். அத்துடன் புகையிரத ஊழியர்களும் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ,ருக்கும் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிலும் நூற்றுக்கணக்கான வெளிமாவட்ட ஆசிரியர்களும் உச்ச பயனை அடைய முடியும்.

    ஆகவே மேற்படி விடங்களை கவனத்திற்கொண்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற ,யந்திரம் ஏ.ரீ.எம்.  ஒன்றினைப் பொருத்துவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆவன செய்யும் படியும், ,வ்விடயமாக தங்களின் விஷேட கவதனத்தை செலுத்தும் படியும் பொதுமக்களும், பிரதேசவாசிகளும், பிரயாணிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரம் (ஏ.ரீ.எம்.) நிறுவ வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top