• Latest News

    September 30, 2014

    கரவாகான் காசிம் ஜீ

    கரவாகான் காசிம் ஜீ எங்கள் அன்பன்
    காலமெல்லாம் வரலற்றுப் பொய்கையில் ஊறி
    வரலாற்று நூல் பல எழுதி இவ்வூர்
    வாழும் மக்களுக் களித்தான் ஆதாரமாக

    குலத்திலும் அவன் மேலான அன்பன்
    குணத்திலும் அவன் தூய மேலாளன்
    பண்டைக் கால கரவாகுவின் வரலாறு சேர்த்தான்
    பண்பாளன் கலாபூஷணம் காசிம் ஜீக்குப் சோபனமே


    ஏடு பலதேடி எங்கெல்லாம் சென்றானோ இன்று
    ஏணிதனில் ஏறி அவன் வீட்டில் ஏடுகளைப் பார்க்க வைத்தான்
    இரவு பகலாக ஏடுகளைப் பாதுகாத்தான்
    இன்று அவன் பணி பாரெல்லாம் போற்றுகிறதே

    அப்பன் பெயருக்கப்பால் அடுத்த சந்ததி
    அறியாத இவ்வூர் மக்களின் பூர்வீகம் பற்றி
    ஏழு தலைமுறை விளக்கி வைத்தான் அவர்கள்
    என்றென்றும் மறக்காத செயல் என்றும் மாறாதே

    காரியப்பர் வம்சம் காலம் காலமாக எம்
    கல்முனையில் வாழ்ந்தார்கள் என்பதை
    கனவிலும் நான் கண்டதில்லை. இதை
    காட்டித் தந்தவன் காசிம் ஜீ

    கண்டி மன்னர்களை காலமெலாம்
    காத்தவர்கள் எம் கல்முனை மக்கள் என்று
    வரலாற்றுண்மையை எமக்குரைத்தவன்
    வரலாற்று மேலாளன் காசிம் ஜீதான் என்பதை மறக்கத்தான் முடியுமா

    இன்னுமின்னும் எத்தனையோ சங்கதிகளை
    இன்று எழுத்தில் வடித்தவன் காசிம் ஜீ. இவ்வூரின்
    இனிய வரலாற்றின் பல பகுதிகளை எமக்கு
    ஈந்தவள் கண்ணிய மேலாளன் காசிம் ஜீ

    இன்றவன் எம்முடனில்லை அவன் ஈன்றெடுத்த வரலாற்று
    இயல்கள் பல எம் கையில் அவனை எப்படி மறப்போம்
    கண்ணீர் வந்து எம் கண்களை மறைக்கின்றனவே
    கண்ணியமிக்க நாயனே எம் காசிம்ஜீக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அளிப்பாயாக

    வரலாற்று நண்பர்கள் மற்றும் குடும்பம் சார்பாக
    எம்.எம்.எச். அப்துல் காதர்
    ஓய்வு பெற்ற அதிபர்,
    கல்முனை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கரவாகான் காசிம் ஜீ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top