சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.100 கோடி அபராதம் எப்படி வசூலிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கேட்டபோது, ''இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களை கொண்டு அபராதத் தொகை கணக்கிடப்படும்'' என தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:
சொகுசு பஸ் -1
சொத்து விற்பனை பத்திரம் – 19
ரோலக்ஸ் கைக்கடிகாரம் – 7
வைரக் கற்கள் – 573
விலை உயர்ந்த பச்சைக்கல் – 16
290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் – 1
2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், 9 ரத்தினக்கல் பதித்த ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் – 1
அரை கிலோ எடை கொண்ட தங்கக் காசுமாலை – 1
அரை கிலோ தங்கக் குடம் – 1
191 கிராம் தங்க செங்கோல் – 1
இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் – 1
வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் – 1 573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் – 1
1,090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் – 1
இதுதவிர 7 சூட்கேஸ்களில் தங்க நகைகள், ஏராளமான வைரம் பதித்த வளையல்கள், மூக்குத்திகள், தோடுகள், ஒட்டியாணங்கள், தங்க வாள், பட்டுச் சேலைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 1,066 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை தற்போது சென்னை ரிசர்வ் வங்கி மற்றும் கருவூலம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன
0 comments:
Post a Comment