• Latest News

    October 16, 2014

    மருதமுனையில் கடற்கரை பூங்கா அமைப்பதனை தடை செய்ய வேண்டும்: மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்

    பி.எம்.எம்.ஏ.காதர்: மருதமுனை கடற்கரைப் பிதேசத்தில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த  500க்கு  மேற்பட்ட  மீனவக் குடும்பங்களில் இருந்து 273 பேர் ஒப்பமிட்டு அம்பாறை மாவட்டச் செயலாளர் நீல்டி அல்விஸ் அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை  அனுப்பிவைத்தள்ளனர்.

    அந்தக்  கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது :- மருதமுனை மசூர்மௌலானா வீதிக்கும் ஸம் ஸம் வீதிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக அரச அதிகாரிகள் அண்மையில் பார்வையிட்டுள்ளனர்.


    பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் இந்த கடற்கரை பூங்கா அமைக்கும் நடவடிக்கைகள் தொடர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

    மருதமுனைக் கிராமத்தில் முக்கியமாக 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தமது ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடி கைத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின் இயந்திரங்கள், தளபாடங்கள், மீன்வகைகள் போன்றவற்றை பாதுகாக்கும் கட்டங்களும் இப்பிதேசத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் கடற்கரை பூங்கா அமைக்கப்படுகின்ற போது 500க்கும் மேற்பட்ட மீனவக்  குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே கடற்கரை பூங்கா அமைப்பது நல்ல விடையமாக இருப்பதால் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் பொருத்தமான ஒரு இடத்தை இனங்கண்டு அமைக்க நடவடிக்கை எடுக்கமாறு பணிவுடனும் மனிதாபிமானத்துடனும் கேட்டுக்கொள்கின்றேம். இந்தப் பிரச்சினைக்கு கருணை உணர்வோடு சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனையில் கடற்கரை பூங்கா அமைப்பதனை தடை செய்ய வேண்டும்: மாவட்டச் செயலாளருக்குக் கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top