நான் முதலமைச்சர் வேட்பாளராக மோடி எனக்கு ஆதரவு தருவார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு, தற்போதைய அரசியல் சூழ்நிலை, வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது, தேமுதிக நிர்வாகிகள் கட்சி வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் தங்கள் நகர, கிராம, தெரு பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து அதற்கு தீர்வுகாண பாடுபட வேண்டும். அப்போது தான் மக்களின் நன்மதிப்பை நாம் பெற முடியும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளார். எனவே இனி அதிமுகவால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது.
திமுகவும் அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிக்கி உள்ளது. எனவே திமுகவுக்கும் வெற்றி கிடைக்காது. இந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி, அவர்கள் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட்டால், தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயமாக தேமுதிக தலைமையில் ஆட்சி அமையும்.
பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயன்றனர், ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.
தமிழ்நாட்டிலும், மத்தியிலும் பாரதீய ஜனதாவுடன் நமக்கு நல்ல உறவு உள்ளது. எனவே, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
முதல்வர் வேட்பாளர் நான் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஊழலை ஒழிக்கவும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் விரும்பும் மோடி என்னை ஆதரிப்பார்.
எனவே, ஆட்சியை பிடிக்கும் இலக்கை மையமாக வைத்து, நாம் இனி தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும். அதற்கு கட்சியினர் அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment