ஒற்றுமையாக வாழ்ந்து, எமது சமூகத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்
எஸ்.அஷ்ரப்கான்:
இப்றாஹீம் நபியின் தியாகத்தை உணர்த்தும் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து, எமது சமூகத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்க முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
படைத்தவன் கட்டளையை நிறைவேற்ற தனது பெற்ற மகனையே தியாகம் செய்ய முனைந்த இப்றாஹீம் நபியின் இறை பக்தியைக் கொண்ட வரலாற்றை நினைவுகூரும் தியாகத்திருநாளில் இறை கட்டளைக்கு பணிந்து செயற்படுவதுடன் நாட்டின் இன்றைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயற்பட முனைய வேண்டும். அதற்காக இந்நன்நாளில் எமது அரசியல் தலைமைகள் ஒற்றுமையுடன் செயற்பட பிரார்த்திக்க வேண்டுகிறேன்.அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் பிற சமூகங்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளித்து விட்டுக்கொடுப்புடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். அதுவே எதிர்காலத்தில் எமது இஸ்லாமிய கடைமைகளை சிறப்பாக செயற்படுத்தவதற்கும் வழிவகுக்கும். நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்கின்ற முஸ்லிம்களாக நாம் வாழ வேண்டும்.
ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே எமது எதிர்கால சவாலை சிறப்பாக எதிர்கொண்டுஇ நாமும் இலங்கைத் திருநாட்டின் தேசிய இனமே என்கின்ற நிரூபணத்தை ஆட்சியாளர்களக்கு காட்ட முனைவதுதான் இக்கால கட்டத்தின் தேவையாகும்.
இலங்கையில் இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் பொறுமையுடன் வாழ்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கான சிறப்பான இருப்பினை பெற பிரார்த்திப்பதோடு எமக்கு முன்னுள்ள சவாலை புத்திசாதுரியத்துடன் எதிர் கொள்ள முனைய வேண்டும். அதற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக என்றும் அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment