நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துப்போம்
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் மக்களும் நிம்மதியாகவும,; சந்தோசமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான்; தனது ஹஜ்ஜூப் பெருநாள் செய்தியில் தெரிவித்தள்ளார்.
இன்று உலகலாவிய ரீதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிரா அநீதிகளும், அநியாயங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் உலக முஸ்லிம் சமூகம் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இப்றாஹீம் நபி (அலை) அவர்கள் உலகிற்கு காட்டித் தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லீம் சமுகத்தின் விடிவுக்காக ஒவ்வொரு முஸ்லீமும் கடைப்பிடிக்க முன் வரவேண்டும்;. என அந்த பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment