• Latest News

    October 11, 2014

    சம்மாந்துறைக் கல்வி வலய அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வு சம்பள உயர்வு தொடர்பாக ஆராயப்படவுள்ளது

    எஸ்.அஷ்ரப்கான்: சம்மாந்துறைக் கல்வி வலய அதிபர் ஆசிரியர்களின்            பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பாக ஆராயும்        அலுவலக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதானிகள் குழு                          திங்கள் கிழமை (13) முதன் முறையாகக் கூடுகிறது.

    இதன்போது, 03/2014 சுற்றறிக்கைக்கமைய, கிழக்கின் 17 கல்வி வலயங்களிலும் வழங்கி முடிக்கப்பட்டுள்ள அதிபர்களுக்கான தாபனக் கோவையின் 7:4 பந்திக் கமைவான சம்பள மாற்றியமைப்பு தொடர்பில் சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள், இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்ட 06.10.1994அன்று அல்லது அதற்கு முன் சேவைக்கு வந்த, அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும்  2008/45 சுற்றறிக்கைக்கமைய இதுவரை செய்யப்படாதுள்ள உள்ளீர்ப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை வழங்குவதிலுள்ள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்,
    201130 சுற்றறிக்கைக்கமைய 31.12.2010 வரை பதவி உயர்வுக்குத் தகுதி பெற்ற சகல ஆசிரியர்களும் உரிய பதவி உயர்வுகளை வழங்குவதிலுள்ள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள், 2008/50 சுற்றறிக்கைக்கமைய 1990.02.22க்குப் பின் தகுதிகாண் மற்றும்; பயிலுநர் ஆசிரியர் நியமனம் பெற்று, 06.10.1994க்குமுன் நிரந்தர ஆசிரியர் நியமனம் பெற்ற சகல ஆசிரியர்களையும், அதன் 07ஆம்பந்திக்கமையசேவையின் 3-ஐஐக்கு தற்காலிக உள்ளிப்புச் செய்த நியமனக் கடிதம் வழங்குவதிலுள்ள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள், 06/2006 (IV) மற்றும்  28/2010 சுற்றறிக்கைளுக்கமைய தகுதி பெற்ற சகல அதிபர், ஆசிரியர்களும்; சம்பள மாற்றியமைப்பு வழங்குவதிலுள்ள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள், முதலாவைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்வுள்ளன.

    வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் கூடவுள்;ள இக்குழுக்கூட்டத்தில், அலு வலக அதிகாரிகள் சார்பில், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், தொழிற்சங்க பிரதானிகள் சார்பில், இலங்கை இஸ்லாமிய அசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், சம்மாந்துறைவலய அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறைக் கல்வி வலய அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வு சம்பள உயர்வு தொடர்பாக ஆராயப்படவுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top