சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏ. பி. டிவிலியர்ஸ் 869 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் விராட் கோஹ்லி, மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது
இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த மேற்கிந்திய அணிக்கு
எதிரான ஒருநாள் தொடரில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 191 ஓட்டங்கள்
எடுத்து, இந்திய அணி தொடரை கைப்பற்ற உதவினார்.
தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 722 புள்ளிகளுடன் 8வது இடத்தையும்,
நடுக்கள ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா 650 புள்ளிகளுடன் 15 இடத்தையும்
பிடித்துள்ளனர்.

0 comments:
Post a Comment