ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது. ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோர் இதன் மூலம் பிரதியமைச்சர்களாக தெரிவாகவுள்ளனர்.
இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது. ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோர் இதன் மூலம் பிரதியமைச்சர்களாக தெரிவாகவுள்ளனர்.
மேலும் கட்சித் தலைவரின் உறவினர்களில் ஒருவருக்கு வெளிநாடொன்றுக்கான தூதுவர் பதவியும், இன்னொருவருக்கு கூட்டுத்தாபனமொன்றின் தலைவர் பதவியும் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தற்போதைய அமைச்சினை விட அதிகாரம் கொண்ட அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளார். பெரும்பாலும் கல்வித்துறையுடன் அல்லது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அமைச்சுப் பதவியொன்று அவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவுக்கு நன்றிக்கடனாக அக்கட்சியின் ஊடக ஆலோசகரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவருக்கு அதிகாரமற்ற வசதிவாய்ப்புகள் கொண்ட பதவிகள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் பலம்வாய்ந்த அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் மேற்கண்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் மட்டக்களப்பில் போட்டியிடவுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளர் அணித் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
அமைச்சர் ஹக்கீம் தற்போது கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அடுத்த பொதுத் தேர்தலின் போது ஹக்கீமுக்குப் பதிலாக அவரது மருமகன் கண்டியில் போட்டியிடவுள்ளாராம்?
எனினும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சி ஒன்றில் (அமைச்சர் விமல் வீரவங்ச கட்சி) இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து எழும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும் என்று கட்சித் தலைமை கருதுகின்றது.
இதற்கிடையே முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப காலம் தொட்டு அதன் வளர்ச்சிக்குப் பங்களித்த ஆதரவாளர்கள் பலரும் இந்த தகவல்களை அறிந்து பெரும் அதிருப்திக்குள்ளாகி இருக்கின்றனர்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மாகாண சபை ஆட்சியை பகிர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம்களில் பெருமளவானவர்கள் வலியுறுத்தினர்.
தற்போதைய தேர்தலில் ஆளும் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும் ஹக்கீம் தரப்பு தொடர்ந்தும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்க முயற்சிக்கின்றது.
இதன் மூலம் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் நலன்களை விட தனது நலன்களுக்கு மாத்திரமே ஹக்கீம் முன்னுரிமை கொடுப்பதாக பலரும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment