வெளிநாட்டவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
தற்போது கூட கடலை நிரப்பி நகரமாக்கும் திட்டத்தின் 46 வீதமான காணிகள் சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மீது வரிக்கு மேல் வரி அறவீடு செய்யும் நீங்கள், சீனர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றீர்கள்.
கடலை நிரப்பி துறைமுகம் அமைக்கும் சீன நிறுவனம் மிகவும் மோசமானது என உலக வங்கி தெரிவித்துள்ளது.எவ்வளவு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
தற்போது கூட கடலை நிரப்பி நகரமாக்கும் திட்டத்தின் 46 வீதமான காணிகள் சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மீது வரிக்கு மேல் வரி அறவீடு செய்யும் நீங்கள், சீனர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றீர்கள்.
இந்த நிறுவனம் ஊழல் மோசடி மிக்கது என உலக வங்கி குறித்த நிறுவனத்தை தடை செய்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியும் குறித்த நிறுவனத்தை தடை செய்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
கல்பிட்டியில் 14 தீவுகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீவுகளின் ஆயிரம் ஏக்கர் காணி கொள்ளையிடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், இயற்கை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீன நிறுனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் கொள்ளை மக்களை வாழ வைப்பதா அல்லது பல்தேசிய நிறுவனங்களை திருப்திப்படுத்துவதா?
பல்தேசிய நிறுவனங்களுக்கு ஏன் இந்தளவு காணிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டில் வீடுகள் இன்றி 15 லட்சம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் நீங்கள் கொல்ப் மைதானங்களை அமைக்கின்றீர்கள்.
இல்லாதவர்களிடமிருந்து பறித்து இருப்பவர்களை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்துள்ளது என சஜத் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா தூதரக புனர்நிர்மானப் பணிகளை புலிகளிடம் ஒப்படைத்தமை நியாயமானதா?- சஜித் கேள்வி
ஜெனீவா தூதரக புனர்நிர்மானப் பணிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டமை நியாயமானதா என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மானிக்கும் ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யார் வழங்கியது?
யார் அந்த ஒப்பந்தத்தை வழங்கியது? யார் அந்த கொடுக்கல் வாங்கலை அனுமதித்தது? யார் அதற்காக பணம் செலவிட்டது?
ஜனாதிபதிக்கு இது பற்றி கேள்விபட்டு உடனடியாக திறைசேரியின் பணிப்பாளரின் ஊடாக நான்கு பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
கணக்காய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.
ஏன் இந்த கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.? யார் இந்த கணக்காய்வு அறிக்கையை மறைத்து வைத்திருப்பது.?
இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்த உன்னத சபையில் கைகளை உயர்த்தி அனுமதியளிக்கும் பணமே இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணம் யாருக்கு செல்கின்றது.?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே இந்தப் பணம் செல்கின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் கேள்விகளுக்கு தாம் பதிலளிக்கப் போவதில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றில் இது குறித்து உரையாற்றுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிடம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகின்றேன்.
அன்று புலிகளுக்கு யார் ஆயுதங்கள் வழங்கினார்கள்.
அன்று புலிகளுக்கு பணம் வழங்கியது யார் நாமே வழங்கினோம்.
கலதாரி ஹோட்டலில் புலிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கியது யார்.?
சஜித் பிரேமதாச ஜெனீவா தூதரகத்தில் வெள்ளைடித்தல் பற்றி பேசுகின்றார்.
நீங்கள் எங்கள் மீத ஒரு விரலை சுட்டும் போது ஒன்பது விரல்கள் உங்களை சுட்டுகின்றது என சஜின் வாஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment