• Latest News

    October 20, 2014

    ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறது ஒர் அரசியல் கணிப்பு

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களை  போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்று ஞாயிறு செய்தித்தாள் ஒன்று கணக்கீடு செய்துள்ளது.

    இதன்படி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறை ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட வேண்டுமானால் அவருக்கு 50.1வீத வாக்குகள் அவசியம். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ள 11 மில்லியன் வாக்காளர்களில் இருந்து இந்த தொகை அவருக்கு கிடைக்க வேண்டும்.

    அதாவது குறித்த 11 மில்லியன் வாக்குகளில் மஹிந்த ராஜபக்ச வெற்றிப்பெற வேண்டுமானால் அதிஸ்டவசமாக அல்லது துரதிஸ்டவசமாக சிங்கள பௌத்த வாக்காளர்களான 74 வீத வாக்காளர்களில் (8 மில்லியன் வாக்காளர்கள்) இருந்து 5.5 மில்லியன் வாக்குகளை பெறவேண்டும்.

    எனினும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவதால் இது சாத்தியமானதல்ல என்று கருதப்படுகிறது. 2005ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க 4.7 மில்லியன் வாக்குகளை பெற்றார். எனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடிப்படையில் 4 மில்லியன் வாக்குகள் உள்ளன.  அத்துடன் சிறுபான்மையினரின் வாக்குகளை மஹிந்த ராஜபக்சவை காட்டிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

    ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் 26வீத வாக்காளர்கள் (3 மில்லியன் வாக்காளர்கள்) சிறுபான்மையினராக உள்ளனர். இதில் 1.5 வீதமானோர் வாக்களித்தாலே ரணில் விக்கிரமசிங்கவுக்கு 5.5 மில்லியன் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்.

    மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் அது இலகுவான இலக்காக இருக்காது. எனவே கிழக்கில் இருந்து சூரியன் உதிக்கும் என்பது உண்மையானால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெல்வதும் உறுதி என்று ஞாயிறு செய்தித்தாள் ஒன்றின் அரசியல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறது ஒர் அரசியல் கணிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top