எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த
வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து
மட்டங்களிலும் கலந்தாராய்ந்து வருகின்றோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
கட்சியின் அனைத்து மட்டங்களிலும்
கலந்துரையாடல்களை நடத்திவிட்டே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு
ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு வரமுடியும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார் .
” முதலில் தற்போது ஜனாதிபதி தேர்தல்
நடைபெறுவதற்கே எங்களுக்கு பூரண உடன்பாடில்லை. தற்போதைய
நிலைமையில் முதலில் பாராளுமன்றத் தேர்தல்தான் நடைபெறவேண்டும்
என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். காரணம் தற்போதைய பாராளுமன்ற
ஆசன சமன்பாடு நாட்டை உரிய முறையில்
பிரதிநிதிதித்துவப்படுத்தவில்லை ” என்று அமைச்சர்
தெரிவித்துள்ளார் . அவருடனான குறுகிய நேர்காணல் வருமாறு
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளது?
பதில்: ஜனாதிபதி தேர்தலில் எந்த
வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து
மட்டங்களிலும் கலந்தாராய்ந்துவருகின்றோம். கட்சியின் அனைத்து
மடடங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தவிட்டே ஜனாதிபதி
தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு வர
முடியும்.
கேள்வி: எப்போது முடிவை கூறுவீர்கள்?
பதில்: எப்படியும் நவம்பர் மாதத்தில் கூறுவோம்
கேள்வி: ஆளும் ஐககிய மக்கள் சுதந்திர
முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்க ஏன் தயக்கம்?
பதில்: எமது கட்சியை பொறுத்தவரை முதலில்
தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கே எங்களுக்கு
உடன்பாடில்லை. தற்போதைய நிலைமையில் முதலில் பாராளுமன்றத்
தேர்தல்தான் நடைபெறவேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு
உடன்பாடடில்லை. இதனை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்
கேள்வி: இடதுசாரி கட்சிகளும் இவ்வாறு கூறியுள்ளனவே?
பதில்: அதுபோன்றுதான் நாங்களும் கூறுகின்றோம்.
கேள்வி: அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?
பதில்: காரணம் தற்போதைய பாராளுமன்றம்
நாட்டை உரிய முறையில் பிரதிநிதிதித்துவப்படுத்தவில்லை.
தற்போதைய பாராளுமன்ற ஆசன சமன்பாடு என்பது நாட்டின் உண்மையான
களநிலைவரத்தை பிரதிபலிக்கவில்லை. அரசியல் களநிலைவரத்தை
பிரதிபலிக்கவில்லை. எனவே பாராளுமன்றத் தேர்தலைத்தான் நாங்கள்
விரும்புகின்றோம் என்றார்.-
கேசரி -

0 comments:
Post a Comment