அல்-மனார் மாணவி பாத்திமா ஹம்தா ஸீனத் சமீம் வேண்டுகோள்
பி.எம்.எம்.ஏ.காதர்:
பி.எம்.எம்.ஏ.காதர்:
சிறுவர்களாகிய எங்கள் மனது மிகவும் மென்மையானது இந்த மென்மையைப் புண்படுத்தாதீர்கள் எங்களைக் கண்ணியமாக நடாத்துங்கள் எங்களை கௌரவப்படுத்துங்கள் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என வேண்டுகொள் விடுத்தார் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் 3ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி செல்வி பாத்திமா ஹம்தா ஸீனத் சமீம்.
அல்-மனார் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்ற இந்த சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றகீம், விஷேட அதிதியாக கல்முனை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார், அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களான வை.கே.றகுமான். கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முகர்ரப். ஆகியோருடன் பிரதி அதிபர் முகைதீன் முஸம்மில் உதவி அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு செல்வி பாத்திமா ஹம்தா ஸீனத் சமீம் மேலும் உரையாற்றுகையில் :- இன்று இந்த நாட்டில் எந்தப் பத்திரிகையை விரித்தாலும் எந்தத் தொலைக் காட்சியைப் பார்த்தாலும் சிறுவர் துஷ்பிரயோகம் சிறுவர் கொடுமை சிறுவர் சித்திரவதை சிறுவர்கள் கடத்தல் என்றே காணப்படுகின்றது. நாங்கள் என்ன குற்றம் செய்தோம் நாங்கள் சிறுவர்களாக இருப்பது குற்றமா?
சர்வதேச சிறுவர் தினம் பெயரளவிலேயே அனுஷ்டிக்கப்படுகின்றது எங்களுக்கு நிம்மதியில்லை சந்தோசமில்லை சுதந்திரம் இல்லை வெளியிலே சுதந்திரமாக நடமாடமுடியாது பாடத்திற்குச் செல்ல முடியாது பணத்திற்காகவும் பாவம் செய்வதற்காகவும் எங்களைக் கடத்துகின்றார்கள்.
இன்றைய சிறுவர்களாகிய நாங்கள்தான் நாளையத் தலைவர்கள் நாங்கள்தான் ஆசிரியர்களாக, நீதிபதிகளாக, வைத்தியர்களாக, பொறியிலாளர்களாக, சட்டத்தரணிகளாக, அறிவியல் வல்லுநர்களாக, தாய், தந்தையர்களாக உருவாகப் போகின்றோம் எங்களால்தான் நாளைய உலகம் உருவாக்கப்படப்போகின்றது.
ஆகவே நாங்கள் சுதந்திரமாகப் பேசவேண்டும் சுதந்திரமாக விளையாட வேண்டும் பட்டாம் பூச்சிகளைப் போல் சிறகடித்துப் பறக்க வேண்டும் எங்களுக்கென்று தனி உலகமே இருக்கிறது எல்லோரும் சிறுவர்களுடன் அன்பாகப் பேசுங்கள் அன்பாக நடந்து கொள்ளுங்கள் எங்களைப் புண்படுத்தாதீர்கள் எங்களை கௌரவப்படுத்துங்கள் என எல்லோரிடமும் மிகவும் பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றேன் என செல்வி பாத்திமா ஹம்தா ஸீனத் சமீம் தனது சிறுவர்தின விஷேட உரையை நிறைவு செய்தார்;
0 comments:
Post a Comment