சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் துன்புறுத்தல் என்பவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டுதலின் கீழ் நீதியமைச்சு வழங்கி வரும் பங்களிப்புக்கும், சிறுவர் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்குமாக ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியத்தின் (ருNஐஊநுகு) இலங்கைப் பிரதிநிதி உனா மெக்கெவ்லே அவ்வமைப்பின் சார்பில் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள சிறுவர் உரிமைகள் மாநாடு பற்றி விளக்கிக் கூறுவதற்காக அமைச்சர் ஹக்கீமை நீதியமைச்சில் செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் சந்தித்து உரையாடிய போதே ஐ.நா சிறுவர் நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி மெக்கெவ்லே அவ்வாறு தெரிவித்தார்.
ஐ.நா சிறுவர் நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகளுடன் சிறுவர் பாதுகாப்புக்கான ஐ.நா உயர் அதிகாரி கெரோலின் பெகர் மற்றும் அந் நிதியத்தின் ஆலோசகர் லக்ஷான் மதுரு சிங்க ஆகியோரும் அமைச்சருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இதில் பங்குபற்றினர்.
சிறுவர் உரிமை சாசனம் மனித உரிமைகள் வரலாற்றிலேயே மிகவும் முக்கியம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்றாக மதிக்கப்படுகின்றது. அது உலகெங்கிலும் இளவயதினர் தொடர்பிலான நோக்கில் மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது. 1991 ஆம் ஆண்டிலேயே இலங்கை அதனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. பிரஸ்தாப உடன்படிக்கை 1989 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பாடசாலைக் கல்வியை கைவிட்ட சிறுவர்கள் பற்றியும் ஊட்டச் சத்து குறைபாடுடைய சிறுவர்கள் பற்றியும் அவர்களுக்கான சுத்தமான நீர், சுகாதார வசதிகள் என்பவற்றின் அவசியம் பற்றியும் அதனூடாக பெரிதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கல்வி, அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு என்பனவும் உறுதிப்படுத்தப்பட்டது.
இலங்கையில் இளஞ் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் அதனை முறியடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment