கடும்போக்கு
அமைப்பான பொதுபலசேனாவும் அகில் இலங்கை இந்து சம்மேளனம் என்ற இந்து
அமைப்பும் இணைந்து பௌத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை என்ற ஒரு அமைப்பை
உருவாக்கியுள்ளதாகபொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இந்து சம்மேளனமும்
பொதுபலசேனாவும் இணைந்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை
நடத்தின. இதன்போது கருத்து வெளியிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர், காலிமுகத்திடலில் பச்சை பட்டங்களை
பறக்கவிடுவதனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மக்களின் மனங்களை
கவர்வதற்கு வலுவான பொறிமுறை தேவை. இதன்மூலம் வழங்கப்படும் செய்தியினால்
எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வரமுடியும். இந்தநிலையில் அகில இலங்கை இந்து
சம்மேளனத்துடன் தீவிரமான வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தேரர்
கூறியுள்ளார் .
கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டவர்கள் தமிழர்கள் அல்லர்:
அங்கு
உரையாற்றியுள்ள அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் எம்.
அருள்காந்,தமிழர்கள் என்பவர்கள் அனைவரும் இந்துக்கள். கிறிஸ்தவத்துக்கு
மதம் மாற்றப்பட்டவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதை நாம் தெளிவாகச்
சொல்கின்றோம். வடக்கில் அடுத்த முறை தேர்தலில் நிற்கும் தமிழ் தேசிய
கூட்டமைப்பினர் நான் ஒரு இந்து. எனக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம்
வாக்குக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் மட்டுமே இந்துக்களும்
வாக்களிக்க வேண்டும்.
கொழும்பில் நடைபெற்ற விவேகாநந்தர் விழாவில் தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கும் நாம் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அவர்கள்
வரவில்லை. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தனிநாயகம் அடிகளாரின் சிறப்பு
விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கூட்டமைப்பு சம்பந்தன் ஐயாவும்
கைகொடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அவர்களது வேலைத்திட்டங்களுக்காக தமிழர்களை கிறிஸ்தவர்களாக உலகுக்குக் காட்டிக்கொள்கின்றார்கள் என்பது இதிலிருந்து நன்றாக விளங்குகின்றது. ஐரோப்பிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே கூட்டமைப்பினர் இவ்வாறு இந்துக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்கள்,கூட்டமைப்பின் இந்த போலி நாடகத்தை நன்கு இனங்கண்டு கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்
அவர்களது வேலைத்திட்டங்களுக்காக தமிழர்களை கிறிஸ்தவர்களாக உலகுக்குக் காட்டிக்கொள்கின்றார்கள் என்பது இதிலிருந்து நன்றாக விளங்குகின்றது. ஐரோப்பிய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே கூட்டமைப்பினர் இவ்வாறு இந்துக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்கள்,கூட்டமைப்பின் இந்த போலி நாடகத்தை நன்கு இனங்கண்டு கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்
மேலும் அவர் இந்துத்துவப் பிரச்சாரம் தொடர்பில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்.
‘இந்துக்களை பாதுகாக்கும் இந்த முயற்சியை
நாம் முன்னெடுப்பதற்கு, இந்த பொதுபல சேனாவின் தேரர்களையும் யாழ்ப்பாணம்
அழைத்து செல்வோம். இந்த தேரர்களிடம் நிறைய விடயங்கள் எமக்கு
பேசவேண்டியுள்ளது. நாம் ஒன்றிணைந்து சங்கங்கள் அமைப்போம். நாடு முழுவதும்
இதற்காக செயற்படுவோம்’ என கூட்டமைப்பினர் எம்மிடம்
தெரிவித்தனர்.எனவும் அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் எம்.
அருள்காந் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment