எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நவம்பர் மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என சிங்கள பத்திரிகையொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.
மற்றுமொரு தரப்பினர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.எனவே, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நவம்பர் மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என சிங்கள பத்திரிகையொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண தலைவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென கோருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலத்தில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரையில் கட்சியின் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment