நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே 10 வருடகாலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து அதன் பலனை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்க முடிந்தது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் 5 வருடங்கள் பணியாற்றிய பின்னர், அடுத்த 5 வருடத்தின் மூன்று வருடங்கள் செல்லும் போது கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்படும்.
அப்போது நாட்டை கட்டியெழுப்ப இடமில்லாமல் போகும். நாடு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஸ்திரத்தன்மையான அரசாங்கம் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment