ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று அதிகாலை திடீர் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.
மங்கள சமரவீரவின் வெளிநாட்டுப்பயணம் குறித்து சிங்கள இணையத்தளங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
மங்கள சமரவீர அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத் தகவல் வட்டாரங்களின் பிரகாரம் இன்று அதிகாலை அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஓரிரு நாட்களில் நாடு திரும்பவுள்ள மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷ அரசின் துறைமுக, கப்பல்துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் மங்கள சமரவீர தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றிருக்கும் தகவல் கிடைத்துள்ளது என்று கொழும்பு டுடே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment