• Latest News

    November 23, 2014

    அட்டாளைச்சேனை வீதிகளின் அவல நிலை போக்குவது யாரோ..??

    துறையூர் ஏ.கே மிஸ்பா ஹல் ஹக்:
    கடந்தவாரம் முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அட்டாளைச்சேனை 1 ஆம் பிரிவு, 9ஆம் பிரிவு,8ஆம் பிரிவு,15ம் பிரிவு வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.அன்றாடம் பாட சாலை செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப் படுவதாகவும் அறிய முடிகிறது.சில குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயரக் கூடிய நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.சிறந்த வாடிகால் அமைப்பு தொழில் நுட்பங்கள் இல்லாமையே இதற்கான பிரதான காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பல வருட காலமாக இம் மக்கள் இவ்வாறு அல்லலுற்று வாழ்கின்ற போதிலும் சம்பந்தப் பட்டவர்கள் இது பற்றி கரிசனை கொண்டதாகவும் அறிய முடியவில்லை.

    எனவே,சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கரிசனை கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று இப்பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்டாளைச்சேனை வீதிகளின் அவல நிலை போக்குவது யாரோ..?? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top