• Latest News

    November 19, 2014

    2020 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான வேகமான நீர் இணைப்புத்திட்டத்தினை வழங்க முடியும்:அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

    பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் நீர் வழங்கல் இணைப்புக்களும் தற்போது 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆகவே அரசாங்கம் அது தொடர்பான திட்டங்களை செயற்படுத்தும் வகையில் தற்போது செயற்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

    2005 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் நீர் இணைப்பு நடவடிக்கைகள் 900,000 செயற்படுத்தப்பட்டதுடன் 1.8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு முதலிடப்பட்டது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற வர்த்தக கட்டுமான மாநாட்டு மூன்றாவது அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    2014 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பல புதிய நீர் வழங்கல் இணைப்புக்கள் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அப்புதிய இணைப்புக்களுக்கென சுமார் 1.3 மில்லியன்  ஒதுக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் செயற்படுத்தப்படவுள்ள 450,000 இணைப்புக்கள் வெளிநாட்டு நிதியிடல் திட்டங்களும் மற்றும் 425,000 செயற்திட்டங்கள் நமது நாட்டினால் செயற்படுத்தப்பட்டன, அத்துடன், 275,000 119,000 எனப்பல இணைப்புத்திட்டங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இந்த அனைத்து திட்டங்களின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான வேகமான நீர் இணைப்புத்திட்டத்தினை வழங்க முடியும். தற்போதும் கூட பெரும்பாலான நீர் இணைப்புத்திட்டங்கள் பாரிய அளவிலிருந்து மிகச்சிறியளவு வரை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டமிடப்பட்ட அனைத்து செயற்திட்டங்களும் உள்ளூர் நிர்மாணிப்பாளர்கள், அதிகாரிகள் மூலம் திறன்பட செயற்படுத்தப்படும்.

    முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்துக்கு JAICA, KOIKA மற்றும் ADB ஆகிய நிதி நிறுவனங்கள் உதவி வழங்கி வருகின்றன. வடக்கு கிழக்கிற்கான நீர் வழங்கல் இணைப்புத்திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன. நீர் என்பது அனைவருக்குமான வாழ்க்கையாகும், எனவே நாம் அனைவருக்குமான குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கான வாழ்க்கையினை வழங்கி வருகிறோம் என்றார். 

    நீர் வழங்கல் இணைப்பு பிரிவுகளை மட்டுமே நம்பி 3,600 சமூகங்கள் வாழ்வதாகவும் இதனால் சுமார் 2.7 மில்லியன் மக்கள் நன்மையினைப் பெற்று வருகிறார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக சம்பூர் நீர் வழங்கல் திட்டம், கிளிநொச்சி மற்றும் ருகுணுபுர திட்டங்களை அமைச்சர் நினைவு கூர்ந்ததுடன் எந்தவிதமான நீர் விரயமாகலும் இல்லாது சுத்தமான சுகாதாரமான நீரை வழங்குவதே எமது நோக்கமென அமைச்சர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2020 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான வேகமான நீர் இணைப்புத்திட்டத்தினை வழங்க முடியும்:அமைச்சர் தினேஷ் குணவர்த்தன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top